Connect with us
Cinemapettai

Cinemapettai

anniyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷங்கர் படத்தில் இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. நம்ம ‘நந்தினி’ சதா ரேஞ்சுக்கு வருவாங்களா?

இந்தியன் 2, அந்நியன் ரீமேக் போன்ற சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது ஹிந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் சங்கர்.

முன்னதாக அந்நியன் ரீமேக்கில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதை உறுதி செய்தனர். அந்த அறிவிப்பு வெளியானபோது அந்நியன் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஷங்கரை தாக்கி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதேபோல் சங்கரும் பதிலடி கொடுக்கும் வகையில் தன் பங்குக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டார். இருவரும் மாறி மாறி தங்களைத் தாக்கி கொண்டனர். போதாக்குறைக்கு இந்தியன் 2 படத்தை அரைகுறையாக கைவிட்டதால் சங்கர் இனிமேல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது என லைகா நிறுவனம் ஒரு பக்கம் வழக்கு தொடர்ந்தது.

இதையெல்லாம் தாண்டி தற்போது சங்கர் அந்நியன் ரீமேக்கை எவ்வளவு தடை வந்தாலும் இயக்கியாக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறார். மேலும் அது அவரது ஈகோவை சீண்டியதால் கண்டிப்பாக அந்நியன் ரீமேக்கை மாபெரும் வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என உறுதியுடன் உள்ளார்.

அந்தவகையில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தற்போது பாலிவுட் சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கியாரா அத்வானி(kiara advani) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்நியன் படத்தில் நந்தினியாக சதாவின் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். அந்தளவுக்கு கியாரா அத்வானி நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

kiara-advani-cinemapettai

kiara-advani-cinemapettai

Continue Reading
To Top