இந்த வாரம் டிஆர்பியை பெற்ற முதல் 6 சீரியல்கள்.. ஆட்டநாயகன் இல்லையென்றாலும் எதிர்நீச்சல் எத்தனாவது இடம் தெரியுமா?

TRB Rating: ஒவ்வொரு வாரமும் சீரியல்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்று டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். அந்த வகையில் கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களை வைத்து எந்தத் தொடர் அதிக டிஆர்பியை பெற்றுள்ளது என்ற விவரமும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் முதல் ஆறு இடங்களிலும் விஜய் டிவி தொடர் இடம் பெறவில்லை.

அதாவது எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி மற்றும் ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இடம் பெற்றிருக்கிறது. ஒரே கதையை உருட்டி வருவதாலும் தொடரில் சுவாரசியம் இல்லாதது தான் விஜய் டிவி இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பெருத்த அடி வாங்கி இருக்கிறது. ஆகையால் மற்ற இடங்களில் அதிகமாக சன் டிவி தான் பெற்றிருக்கிறது.

Also Read : பாக்கியலட்சுமியில் சக்களத்தி சண்டை விட மோசமாக இருக்கும் போல.. எழிலின் தலையில் இடியை இறக்கிய அமிர்தா

அந்த வகையில் ஆறாவது இடத்தில் 8.34 ரேட்டிங் பெற்று மிஸ்டர் மனைவி தொடர் இருக்கிறது. இதற்கு முன்னதாக ரிஷி மற்றும் ஆலியா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இனியா தொடர் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் நான்காவது இடத்தை ஸ்ரீ கதாநாயகனாக நடித்து வரும் வானத்தைப் போல தொடர் பெற்றிருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் முதல் மூன்று இடத்திலும் சன் டிவி தொடர் தான் பெற்றிருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடர் 9.79 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அடுத்ததாக 10.74 ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தை சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் தொடர் பெற்று இருக்கிறது.

Also Read : ஜெயிலுக்குப் போகும் ஜீவா கதிர்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு எண்டு கார்டே இல்ல

மேலும் முதல் இடத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பது போல இந்த முறையும் எதிர்நீச்சல் தொடர் 10.79 பெற்று தனது இடத்தை தக்க வைத்திருக்கிறது. அதாவது கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற காரணமாக இருந்தது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான்.

அவரது மறைவு எதிர்நீச்சல் தொடருக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. ஆனாலும் ஆட்டநாயகன் ஆதி குணசேகரன் இல்லை என்றாலும் எதிர்நீச்சல் தொடர் கதையின் சுவாரசியம் காரணமாக தற்போதும் முதலிடத்தை எந்த தொடருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அடுத்த வார டிஆர்பியை விரைவில் பார்க்கலாம்.

Also Read : ரட்சிதாவின் சிபாரிசால் பிக் பாஸ்க்கு போகும் சீரியல் நடிகர்.. சாக்லேட் பாயை தூக்கிய விஜய் டிவி

Next Story

- Advertisement -