ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரட்சிதாவின் சிபாரிசால் பிக் பாஸ்க்கு போகும் சீரியல் நடிகர்.. சாக்லேட் பாயை தூக்கிய விஜய் டிவி

Bigg Boss Season 7: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. எப்போதுமே சர்ச்சையான போட்டியாளர்களை இந்நிகழ்ச்சிக்கு விஜய் டிவி தேர்ந்தெடுத்து வரும் நிலையில் இந்த சீசனில் யார் யார் பங்கு பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் நிறைய பிரபலங்களின் பெயர்கள் ஏற்கனவே இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதில் பப்லு பிரித்திவிராஜ், ரேகா நாயர், ரவீணா, பாலிமர் செய்திவாசிப்பாளர் வேல்ராஜ் போன்ற பல பிரபலங்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சீரியல் நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்கப் போகிறாராம்.

Also Read : பெரிய நடிகர்களுக்கு கூட வராத யோசனை.. சொன்னதை செய்து காட்டிய விஜய் டிவி பாலா

அதாவது கடந்த சீசனில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் புகழ்பெற்ற ரட்சிதா பங்கு பெற்றிருந்தார். எல்லா இடங்களிலும் மௌனம் காத்து வந்த அவர் சற்று சிறப்பாக விளையாடி இருக்கலாம் என ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வந்தனர். ஏனென்றால் அவருடன் ராபர்ட் மாஸ்டர் சற்று அநாகரிகமாக நடந்து கொண்ட போது குரல் கொடுத்திருக்கலாம்.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸுக்கு நுழைய வனிதா தான் சிபாரிசு செய்தார். அதேபோல் இப்போது ரட்சிதாவின் சிபாரிசால் பிக் பாஸ் 7 நிகழ்ச்சிக்குள் சின்னத்திரை நடிகர் விஷ்ணு பங்கு பெற இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் ஆபீஸ் போன்ற தொடர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் விஷ்ணு.

Also Read : பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு

ஆனால் அதைவிட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக காரணமாக இருந்த தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரில் அமுல் பேபி கதாபாத்திரத்தில் நடித்து தான். இந்த தொடரில் இவருடன் ஜோடி போட்ட ஆயிஷாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சத்யா தொடரில் நடித்த போதே சாக்லேட் பாயாக வலம் வந்து பெண் ரசிகர்களை விஷ்ணு பெற்றிருந்தார். ஒரு சில வெள்ளிதிரை படங்களிலும் நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மற்ற போட்டியாளர்களின் விவரம் விரைவில் வெளியாகும்.

Also Read : பிக் பாஸ் வீட்டிலும் அடித்து கொள்ள போகும் விஜய் குமாரின் குடும்பம்.. களம் இறங்கிய வனிதாவின் வாரிசு

- Advertisement -

Trending News