ஜெயிலுக்குப் போகும் ஜீவா கதிர்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு எண்டு கார்டே இல்ல

Pandiyan Stores Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிட்டத்தட்ட 1500 எபிசோடுகள் தாண்டி இருப்பதால் அடுத்து எந்த கதையைக் கொண்டு வருவது என்று தெரியாமல் அரச்ச மாவையே அரச்சுட்டு வராங்க. அந்த வகையில் பழனிக்கே போய் பால் காவடி எடுத்தாலும் இப்போதைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு எண்டு கார்டே கிடையாது என்று சொல்லி மொக்கையாய் கதையை உருட்டி வருகிறார்கள்.

அதற்கேற்ற மாதிரி தற்போது மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார் ஜீவா மற்றும் கதிர். அதாவது ஜீவாக்கும் மீனாவின் அப்பாவுக்கும் ஏற்கனவே மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனாலும் பிரஷாந்த், மீனாவின் அப்பாவை ஏமாற்றுகிறார் என்று தெரிந்ததால் ஜீவா அவ்வப்போது மாமனாரை சந்தித்து எச்சரிக்கை கொடுத்துட்டு வந்தார்.

Also Read:பாக்யாவை சிக்கலில் மாட்டிவிட்ட கோபி.. கரடி மூஞ்சி வாயனுக்கு என்ன ஒரு ஆனந்தம்

ஆனாலும் அதை எல்லாம் கேட்காமல் கண்மூடித்தனமாக இளைய மருமகனை நம்பினார். கடைசியில் பிரசாந்தின் கெட்ட எண்ணம் தெரிந்ததால் கோபத்தில் அவரை அடிக்க போனார். அப்போது இவர்களுக்கு நடந்த வாக்குவாதத்தில் ஜனார்த்தனத்தின் கணக்குப்பிள்ளையை பிரசாந்த் கீழே தள்ளிவிட்டார்.

இதை பார்த்த ஜனார்த்தன் கோபத்துடன் பிரசாந்தை தாக்கப் போனார். ஆனால் பிரஷாந்த் அவரை தடுத்து அந்த கத்தியால் மாமனாரை குத்தி விடுகிறார். அத்துடன் தன்னுடைய வயிற்றிலும் காயத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸிடம் மொத்த பலியையும் ஜீவாவின் மீது திசை திருப்பி விட்டார். இதற்கு இடையில் இவர்களுக்கு இருந்த கருத்து வேறுபாடுனால் ஜீவா மற்றும் கதிர் வீட்டிற்க்கே போயி அவருக்கு எச்சரிக்கை கொடுத்து வந்தார்.

Also Read:பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு

இதனால் இவரை கொன்றது ஜீவா மற்றும் கதிராகத் தான் இருப்பார்கள் என்று போலீஸ் நம்பியது. அதனால் அவர்களை கைது பண்ணி ஜெயிலுக்கு கூட்டிப் போகிறார்கள். அத்துடன் ஜீவாவை கைது பண்ணும் போது மீனா எந்தவித ஆட்சபனையும் தெரிவிக்காமல் அப்பாவை நினைத்து அப்படியே அதிர்ச்சியில் உறைகிறார்.

இதனை அடுத்து இவர்கள் மேல் விழுந்த கொலை வழக்கிலிருந்து இவர்களை மீட்டெடுக்கும் கதையில் இன்னும் கொஞ்ச நாட்கள் கதை நகரப் போகிறது. மேலும் மீனா இதனால் வரை ஜீவாக்கு பக்கபலமாக இருந்து வந்தார். அந்த வகையில் தற்போது ஜீவாவை நம்பப் போகிறாரா அல்லது கோபத்தைக் காட்டப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:குக் வித் கோமாளி-யில் விட்டதை பிக் பாஸில் பிடிக்க வரும் நடிகை.. குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி

Next Story

- Advertisement -