Connect with us
Cinemapettai

Cinemapettai

ayesha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீரியல் நடிகை ஆயிஷா உடை மாற்றும் போது உள்ளே புகுந்த இயக்குனர்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆயிஷா துணி மாற்றிக் கொண்டிருக்கும் போது அந்த சீரியலின் இயக்குநர் அவரது அறைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் தங்களுடைய ரசிகர்களின் பார்வை தன்மேல் இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வபோது சமூக வலைதளங்களில் தான் பட்ட கஷ்டங்களை கூறி அனுதாபங்களை தேடிக் கொள்வார்கள்.

பெரும்பாலும் அப்படி செய்தவர்களுக்கு இதுவரை பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஏன் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகைகள் கூட இந்த மாதிரி உத்திகளை பயன்படுத்தி பார்த்து விட்டனர்.

அந்த வகையில் தற்போது சினிமாவுக்கு போக துடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நாயகி ஆயிஷா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் திருமண காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம்.

அப்போது திருமண சேலை கட்டுவதற்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேலானதாக குறிப்பிட்டுள்ளார் ஆயிஷா. முதலில் படப்பிடிப்புக்கு நேரமாகிவிட்டது என இயக்குனர் கதவைத் தட்டிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கதவைத் திறந்து உள்ளே வந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ayesha-cinemapettai-01

ayesha-cinemapettai-01

அப்போது அரைகுறையாக மாற்றிய உடையுடன் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதாகவும், பின்னர் மேலாடையை மட்டும் அணிந்து கொண்டு அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் படப்பிடிப்புக்கு நேரம் ஆகிறது என்பதை சொல்வதற்காக வந்த விஷயத்தை அப்படியே வேறுவிதமாக திரித்து பேசி கடைசியில் உண்மையை கூறியுள்ளார் ஆயிஷா.

Continue Reading
To Top