மணிரத்னத்துடன் நேருக்கு நேராக மோதும் செல்வராகவன்.. யாரும் எதிர்பாராத சிக்கலில் மாட்டும் தனுஷ்

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

சமீபத்தில் தனுஷ் திரைப்படம் திருச்சிற்றம்பலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது அதனால் நானே வருவேன் திரைப்படத்தில் தைரியமாக விடலாம் என படத்தின் தயாரிப்பாளர் தாணு முடிவெடுத்துள்ளார். அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் படத்திற்கு முந்தையநாள் தன்னுடைய படம் வெளியானால் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அப்படியே நானே வருவேன் படத்தையும் பார்க்க ரெடியாவார்கள் என்பதற்காகத்தான் இந்த யுத்தியை கையாண்டு உள்ளார்.

Also read: சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்.. சோழ சாம்ராஜ்யத்தை பெருமைப்பட வைத்த மணிரத்னம்

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதை தாணு பார்த்ததும் தற்போது அவசரப்பட்டு விட்டோமோ என வருந்தி வருகிறார். மேலும் தன்னுடைய நெருக்கமானவர்களுக்கு நானே வருவேன் திரைப் படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

ஆனால் ஒருசிலர் நானே வருவேன் படத்தின் முதல் பாதி ஆளவந்தான் படத்தின் கதை போல் இருப்பதாகவும் இரண்டாம்பாதி வாலி படத்தின் கதை போல் இருப்பதாக கூறியுள்ளனர். அதாவது அண்ணனின் மனைவியை தம்பி அடைய விரும்புகிறார் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

Also read: வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பளிக்க தவறிய மணிரத்னம்

அப்போது அண்ணனுக்கும் தம்பிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சினையை தான் கதையாக வைத்ததாக கூறி உள்ளனர். இதனை பார்த்ததும் தாணு கொஞ்சமும் யோசிக்காமல் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டோம்.

மேலும் நானே வருவேன் படத்தினை பற்றி போகுமிடமெல்லாம் பயங்கரமாக இருக்கும் வில்லன் கதாபாத்திரம் மிரள வைக்கும் என கூறி விட்டோம் தற்போது படத்தின் தேதியை மாற்றினால் பலரும் பலவிதமாக பேசுவார்கள் என்பதால் என்ன செய்வதென தெரியாமல் இருக்கிறார்.

Also read: சரண்டராகி தஞ்சமடைந்த தயாரிப்பு நிறுவனம்.. உச்சாணி கொம்பிலிருந்து தனுஷ் போடும் டீல்

- Advertisement -spot_img

Trending News