சீமான் மைக் சின்னம் அறிவிக்கும்போது வந்த ரிங்க்டோன்.. கலாய்க்கவே வந்த போன் கால்

The ringtone that came when Seaman announced the symbol Mike: இயக்குனர் மற்றும் நடிகராக இருந்து தமிழக அரசியலில் கால் பதித்து அனல் பறக்கும் பேச்சினால் மக்களின் செல்வாக்கை பெற்று வருபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னணி கட்சிகள் பலரும் வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளனர்.

ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனையாக வெற்றி பெறுவதற்கான திட்டம் தீட்டுவதை விட்டுவிட்டு, கட்சிக்கான சின்னத்தை பெறவே போராடி வருகின்றனர்.

முதன் முதலில் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் போது, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது எந்த ஒரு தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தவில்லை.

இதற்குப் பின் ஒதுக்கீடு செய்யப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் சீமானை மக்களிடையே அதிகமாக பிரபலப்படுத்தியது எனலாம். இதனால் இந்த தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இச்சின்னம் கர்நாடகாவில் ஒரு வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்படவே, சட்ட ரீதியாக இதனை கையாண்டனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னும் வெற்றி கைகூடவில்லை.

மேடையில் கட்சியினரை காண்டாக்கிய ரிங்டோன்

இறுதியாக இன்று சின்னத்தை அறிவித்து வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சீமானுக்கு கிடைத்தது என்னவோ ஒலிவாங்கி(மைக்)  சின்னம் தான்.

ஏற்கனவே சின்னம் கிடைக்காத வேதனையில் உணர்ச்சி மிகுந்த நிலையில் பேச ஆரம்பித்த சீமானை கலாய்க்கும் விதமாக  அவருக்கு பின்னால் இருந்து “மாமனாருக்கு ரத்த கொதிப்பு ரிங்டோன்” சத்தமாக ஒலித்தது.

மேடையில் இருந்த சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் பலரும் கோபத்துடன் முறைக்கவே ரிங்டோன் வந்த நபர் கப் சிப் என்று கழண்டு கொண்டார்.

இந்த மாதிரியான தொண்டர்களை வைத்துவிட்டு என்னதான் செய்வது என்பது போல் விழி பிதுங்கி நிலையில் தனது கட்சியின் சின்னம் மைக்கை அறிமுகப் படுத்தினார் சீமான்.

எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு.. இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்