Vijay : விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து அதன் பின்பு அவரது மனைவி என்று அந்தஸ்தை பெற்றார் சங்கீதா. பெரும்பாலும் விஜய் எங்கு சென்றாலும் தனது மனைவியை அழைத்து செல்வது வழக்கமாக வைத்திருப்பார்.
அதோடு விஜய்யின் பட விழாக்களிலும் கண்டிப்பாக சங்கீதா கலந்து கொள்வார். ஆனால் சமீபகாலமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா வருவதில்லை. மேலும் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் சங்கீதா லண்டன் சென்று விட்டார் என்றும் சொல்லப்பட்டது. அதேபோல் சில வருடங்களாக சங்கீதாவை வெளியில் பொது நிகழ்ச்சி எதிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது ஒரு திருமண விழாவில் பங்கு பெற்றிருக்கிறார்.
ஷங்கர் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட சங்கீதா
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு நேற்றைய தினம் தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், கார்த்தி, நயன்தாரா என எக்கசக்க பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி இருந்தார். இந்நிலையில் விஜய்க்கு நண்பன் என்ற சூப்பர் ஹிட் படத்தை ஷங்கர் தான் கொடுத்திருந்தார். ஆனால் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் விஜய் கலந்து கொள்ளவில்லை.
அவரது மனைவி சங்கீதா வருகை தந்திருந்தார். இந்நிலையில் விஜய் இல்லாமல் தனியாக சங்கீதா வந்ததால் இருவரும் பிரிந்து விட்டது உறுதி ஆகிவிட்டதாக கோடம்பாக்கம் கொழுந்து விட்டு இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் விஜய் தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்து போட்டாலே போதுமானது.