புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

5 லட்ச சேமிப்பை மொத்தமாக வாரிக் கொடுத்த சமுத்திரக்கனி.. 2 வருடமாக குடும்பத்தையே திரும்பிப் பார்க்கல

கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சமுத்திரக்கனி. தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கிலும் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார்.

ஆனால் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு அன்னை, தற்காப்புக் கலை தீராத, ரமணி அதன்பிறகு 2005 ஆம் ஆண்டு தங்கவேட்டை என்கின்ற கேம் ஷோ, அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அரசி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியும் அதில் நடித்தும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தார்.

Also Read: அடுத்தடுத்து இத்தனை படங்களா? முன்னணி ஹீரோக்களை ஓவர் டேக் செய்த சமுத்திரக்கனி

அதன்பின் இவருக்கு சுப்ரமணியபுரம் படத்தில் நடிப்பதற்கான சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சமயம் சமுத்திரக்கனி பிஸியாக சீரியல்களை இயக்கிக் கொண்டிருந்ததால், ‘சீரியலே நல்லாதானே போய்க்கொண்டு இருக்கிறது’ என்று சினிமாவில் நடிக்க செல்வதற்கு தயங்கினார்.

‘இதற்காகத்தான் சென்னை வந்தேன். சீரியல் எல்லாம் சினிமாவில் நுழைவதற்கு வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று ஆழமாக புரிந்துகொண்டு பிறகு அவருடைய தயக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு சினிமாவில் முழு மூச்சாக செயல்படத் துவங்கினார்.

Also Read: வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

மேலும் அவரிடம் அப்போது இருந்த மொத்த சேமிப்பாக 5 லட்சத்தை இரண்டு வருடங்களுக்கு குடும்ப செலவிற்கு கொடுத்துவிட்டு சுப்பிரமணியபுரம் சூட்டிங்க்கு போயிருக்கிறார் சமுத்திரக்கனி. அந்தப்படம் இவருடைய சினிமா கேரியருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்து சூப்பர் ஹிட் கொடுத்தது.

பிறகு ஈசன், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, அப்பா போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி குணச்சித்திர நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சினிமாவில் இவர் தொடக்கத்தில் நுழையும்போது எல்லோரும் பட்ட கஷ்டத்தை தான் இவரும் அனுபவித்திருக்கிறார் என்பதை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: பள்ளி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய 7 படங்கள்.. ஞாபகத்தை மோசமாய் தூண்டிய சேரன்

- Advertisement -spot_img

Trending News