வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த யசோதா.. அதிரடி ஆக்சனில் முதல்நாள் வசூலை அள்ளிய சமந்தா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா நடித்த திரைப்படம் யசோதா. இந்த படம் ரிலீசுக்கு முன்னரே பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியது. அதற்கு காரணம் சமந்தா தான். தொடர்ந்து நல்ல கதைகளை, தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே சமந்தா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரும் இந்த எதிர்பார்ப்பிற்கு ஒரு முக்கிய காரணம்.

ஹரி மற்றும் ஹரீஷ் இருவரும் இணைந்து இயக்கிய படம் யசோதா. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார் ,உன்னி முகுந்தன், முரளி ஷர்மா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் சமந்தா நிறைய ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா இந்த சண்டை காட்சிகளை பற்றி மனம் திறந்து பேசினார்.

Also Read: வாடகைத் தாயாக பலகோடி பிசினஸ், குழப்பி விட்ட சமந்தா.. யசோதா வெற்றியா? தோல்வியா? முழு விமர்சனம்

யசோதா திரைப்படம் இதுவரை இந்திய சினிமாவில் யாரும் எடுக்காத கதைக்களம். அதிரடி சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளை கொண்டது இந்த படம். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலுமே யூகிக்க முடியாது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், என 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

40 கோடி பட்சத்தில் உருவான யசோதா திரைப்படம் உலகமெங்கும் 1500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றதால் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 3.20 கோடி வசூலித்துள்ளது. சமந்தா நடிப்பில் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால், இனிவரும் நாட்களில் வசூலை அள்ளிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நயன்தாரா விவகாரத்தை கையில் எடுத்த சமந்தா.. யசோதா திரைப்படத்தின் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஓர் இரவு, அம்புலி, ஆ, போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையை கொண்டிருக்கிறது யசோதா திரைப்படம். வாடகை தாய் முறையில் நடக்கும் மருத்துவ மோசடிகள் மற்றும் அழகுசாதன பொருட்களில் நடக்கும் மோசடிகளை மைய்யமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சமந்தாவின் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு படம் மெருகேறி கொண்டே இருக்கிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் கதீஜாவை சட்டென மறக்கடித்துவிட்டார் இந்த யசோதா. சண்டை காட்சிகளில் அனல் பறக்க வைக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் மிரட்டியிருக்கிறார். சமந்தாவின் சினிமா கேரியரில் யசோதா முக்கியமான ஒன்றாக இருக்கும்.

Also Read: நயன்தாரா மார்க்கெட்டை இறக்க சமந்தா செய்த வேலை.. ட்ரெண்டிங்கில் இருக்கும் யசோதா ட்ரெய்லர்