அக்கட தேசத்திலும் முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய 5 தமிழ் படங்கள்.. துணிவுக்கு தண்ணி காட்டிய சார்

சமீபத்தில் வெளியான தமிழ் படங்கள் பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி, அங்கேயும் மாஸ் கட்டுகிறது. அந்த வகையில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான 5 படங்கள் முதல் நாளிலேயே கோடிகளை வாரி குவித்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் தனுஷின் வாத்தி திரைப்படம் அஜித்தின் துணிவு படத்திற்கு தண்ணி காட்டிவிட்டது.

தெகிம்பு (துணிவு):பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி, போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு வெர்ஷனாக தெகிம்பு என்ற டைட்டிலில் ரிலீஸ் ஆனது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே 1.14 கோடியை வாரிக் குவித்தது.

லவ் டுடே: இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த காதல் திரைப்படம் ஆன லவ் டுடே படத்திற்கு இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தெலுங்கிலும் ரிலீசான லவ் டுடே படம் முதல் நாளில் மட்டும் 1.15 கோடியை தட்டி தூக்கியது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் இளம் இயக்குனர் அறிமுக நாயகனாக நடித்த இந்தப் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

Also Read: பகாசூரனை விட 10 மடங்கிற்கு மேல் வசூல் செய்த வாத்தி.. தலையை சுற்றி வைத்த முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

சார் (வாத்தி): தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேற்று ரிலீசான வாத்தி திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் தெலுங்கில் சார் என்ற டைட்டிலில் வெளியானது. ரிலீசான முதல் நாளிலேயே தெலுங்கில் மட்டும் 2.65 கோடியை வசூல் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் 1: கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் 1  திரைப்படம். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்தனர். முதல் நாளில் மட்டும் தெலுங்கில் பொன்னியின் செல்வன் 2.88 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Also Read: பொறுமையை சோதித்துப் பார்த்த வாத்தி.. இவ்வளவு நெகட்டிவ் விஷயங்களா!

வாரிசுடு (வாரிசு): தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் தமிழகத்தில் மூன்றே வாரத்தில் 300 கோடியை வாரி குவித்தது. அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆக வாரிசுடு என்று டைட்டிலில் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் தெலுங்கில் மட்டும் 3.10 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

இவ்வாறு இந்த 5 படங்கள் தான் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்து தமிழில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் அடித்த படங்களாகும். அதிலும் தெலுங்கில் முதல் நாளிலேயே கோடிகளில் வசூலை அள்ளியது திரையுலகையே வியக்க வைத்தது. மேலும் தனுஷின் வாத்தி திரைப்படம் அஜித்தின் துணிவு படத்தின் முதல் நாள் வசூலை தூக்கி சாப்பிட்டது.

Also Read: வாத்தியாராக அதிரடி காட்டும் தனுஷ்.. சுடச்சுட வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்