செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இன்று வரை பிசினஸ் ஆகாத கார்த்தி படங்கள்.. ஒரே ஒரு காரணத்தால் வளர முடியாமல் போகும் பருத்திவீரன்

தமிழ் சினிமாவிற்கு தன்னுடைய முதல் படமான பருத்திவீரன் படத்தின் மூலம் ஹிட் கொடுத்த நடிகர் கார்த்தி, அதன் தொடர்ச்சியாக சிறுத்தை, கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சமீப காலமாகவே இவருடைய படங்கள் பிசினஸ் ஆகாமல் டல்லடிக்கிறது.

அவர் வளர விடாமல் தவிப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது. தற்போது கார்த்தியின் படங்கள் வியாபார ரீதியாக பெரும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏன் இவருடைய கைதி படத்திற்கு கூட, பிசினஸ் கம்மிதான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படம் லேட் பிக்கப் ஆகி, நல்ல வசூலை பெற்று தந்தாலும் அந்த அளவிற்கு வியாபாரமாகவில்லை.

Also Read: பொன்னியின் செல்வனால் ஆதிபுருஷுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. மொத்த சீட்டுமே அனுமாருக்கு தானா?

கார்த்தி படங்கள் இப்படி வியாபாரம் ஆகாததற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். கார்த்தி இதுவரை இரண்டு, மூன்று படங்கள் தான் வெளி தயாரிப்பாளர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அவருடைய குடும்ப தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட்க்கு தான் அதிக படங்கள் நடித்திருக்கிறார். இந்த நிறுவனம் சூர்யா, ஜோதிகா உடையது என்றாலும் இந்த நிறுவனத்தில் கார்த்தி ஒரு சைலன்ட் பார்ட்னர்.

அதனால்தான் அவருடைய படங்கள் அதிகளவு பிசினஸ் ஆக மாட்டேங்குது. கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற படங்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் வந்திய தேவனாக நடித்த கார்த்திக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அவருடைய 25ஆவது படமான ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

Also Read: நிஜ அப்பா, மகன் கூட்டணியில் வெளியான 6 படங்கள்.. பொன்னியின் செல்வனில் கலக்கிய ரத்த சொந்தம்

இந்த முறை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணையாமல் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக விஜய் மில்டன் மிரட்டுகிறார். ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளியில் கார்த்தியின் சர்தார் படம் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து, இந்த வருட தீபாவளிக்கு ஜப்பான் படம் வெளியாகிறது.

மேலும் இந்த படத்திற்காக சென்னை ஈசிஆர் பகுதியில் பிரம்மாண்டமான கிராமத்து செட்டு போடப்பட்டு படத்தின் சூட்டிங் நடைபெற்று, தற்போது நிறைவடைந்துள்ளது. கார்த்தியின் ஒட்டுமொத்த போஷனும் நிறைவடைந்த நிலையில், இன்னும் சில வேலைகள் மட்டுமே மீதம் இருப்பதால் விரைவில் ப்ரமோஷன் வேலைகளை படக்குழு துவங்க இருக்கின்றனர்.

Also Read: வில்லியாக மிரள வைத்த 5 நடிகைகள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

பலமுறை 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அடி வாங்கிய கார்த்தி, இந்த முறை சுதாரித்துக் கொண்டு ஜப்பான் படத்தின் மூலம் வெற்றியை சுவைக்க காத்திருக்கிறார். அவருடைய எண்ணம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News