வில்லியாக மிரள வைத்த 5 நடிகைகள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

Actresses Act Nagtive Role:பொதுவாக ஹீரோயினாக நடித்த நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள். ஏனென்றால் அதன் பிறகு அவர்களுக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் வாய்ப்பு அதிகமாக வரும் என்ற அச்சத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். ஆனால் அதையும் வில்லியாக நடித்து மிரள வைத்த ஐந்து நடிகைகளை பார்க்கலாம்.

ரம்யா கிருஷ்ணன் : படையப்பா படத்தில் ரஜினிக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போது வரை எந்த நடிகையும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Also Read : சௌந்தர்யா நடிப்பில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. படையப்பா உடன் நீலாம்பரியை கதறவிட்ட படம்

வரலட்சுமி சரத்குமார் : கதாநாயகியாக பல படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமார் வில்லி கெட்டப்பிற்கு பக்காவாக பொருந்துவார். அந்த வகையில் சண்டைக்கோழி 2, சர்கார் போன்ற படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரள வைத்திருந்தார். இப்போதும் இவருக்கு நிறைய நெகட்டிவ் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

ரீமா சென் : கதாநாயகியாக இளம் ரசிகர்கள் கவர்ந்த ரீமாசென் வில்லியாக மிரட்டி இருக்கிறார். அவருடைய நடிப்பு அச்சு அசல் வில்லிக்கு உண்டான தோரணையில் இருக்கும். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென் வில்லியாக நடித்திருந்தார். அதை காட்டிலும் வல்லவன் படத்தில் சிம்புவை பாடாய்படுத்தியிருப்பார்.

Also Read : வில்லியாக நடித்து கெரியரை தொலைத்த 5 நடிகைகள்.. நயன்தாராவிற்கு சக்களத்தியாக மாற துடித்த ரீமா சென்

ஐஸ்வர்யா ராய் : வித்தியாசமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அதாவது அழகு பதுமையாக இருக்கும் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார். ரசிகர்களுக்கு இந்த அழகான வில்லியை பெரிதும் பிடித்திருந்தது.

ஸ்ரேயா ரெட்டி : தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் மிரளச் செய்திருந்தார். அந்த அளவுக்கு தனது துணிச்சலான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

Also Read : படக்குழுவுக்கு தங்க காசு கொடுத்த விஷால் பட நடிகை.. அவரோட மார்க்கெட் தான் அதல பாதாளத்தில் கிடக்கு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்