ரசிகர்களின் மனதை வென்றதா ரத்த சாட்சி.. ஒருவாட்டியாது பார்க்கலாமா? திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்கள் தற்போது உள்ள காலகட்டத்தில் எதார்த்தமாக எடுத்து வருகிறார்கள் பல இளம் இயக்குனர்கள். அந்த வரிசையில் ஜெயமோகன் கதையில் புதுமுக இயக்குனர் இக்பால் இஸ்மாயில் இயக்கிய திரைப்படம் ரத்த சாட்சி. இந்தப் படம் Aha OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது.

படம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு அழகான மலை கிராமத்தில் வாழும் மிகவும் ஏழ்மையான மக்களின் கஷ்டங்களை வைத்து தொடங்குகிறது. இந்த படத்தில் முக்கியமானதாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள இளைஞர்கள் எப்படி மக்களை அடிதடி இல்லாமல் போராடி தனக்கான உரிமையை மீட்டெடுக்க உதவி செய்கிறார்கள் என்பதுதான் கதை.

Also Read : 90ளில் இயக்குனராகவும், நடிகராகவும் கொண்டாடப்பட்ட 5 நட்சத்திரங்கள்.. இரண்டிலும் முத்திரை பதித்த மணிவண்ணன்

படத்தில் நாயகன் கண்ணன் ரவி அமைதியான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பேசும் போதும் மக்களிடம் போராட்டத்தை பற்றி விவரிக்கும் போதும் மிக அழகாக நடித்துள்ளார். படத்தில் கதைக்கு ஏற்றவாறு அந்த கிராமத்தில் உள்ள மக்களை நடிக்க வைத்துள்ளனர் அது எதார்த்தமாக உள்ளது.

படத்தில் தெரிந்த முகம் என்றால் இரண்டு பேர் அதில் முதலில் இளங்கோ குமரவேல் நேர்மையான மற்றும் எதிர்த்து பேச முடியாத போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அடுத்து கொடூரமான போலீஸ் அதிகாரியாக கல்யாண் மாஸ்டர் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படம் என்னதான் மிகவும் எதார்த்தமாக இருந்தாலும் நல்ல கதை களத்துடன் அமைந்துள்ளது. இதிலும் போலீஸ் இவர்களை சமூக விரோதிகளாக கொடுமைபடுத்தி கொள்ளும் காட்சிகள் கொடூரமாக உள்ளது.

Also Read : வாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத 10 மலையாள த்ரில்லர் படங்கள்.. திடுக்கிடும் மர்மம் நிறைந்த ‘சி யூ சூன்’

அமைதியாக சென்ற நாயகன் தனது நண்பன் இறந்ததை அடுத்து போலீஸ்காரரை பழிவாங்க கொலை செய்கிறான் அந்த காட்சியும் கொடுமையாக இருக்கிறது. படத்தில் காதல் காட்சி என்ற பெயரில் ஒரே ஒரு காட்சி வருகிறது அதில் வந்த உடனே இருவரும் பிரிந்து விடுகின்றனர் அமைத்துள்ளனர். பின்னர் நாயகனை கைது செய்கின்றனர். கதை ஆந்திரா சமூக விரோதிகளுடன்
தொடர்புபடுத்தி. கடைசியில் நாயகனை சுட்டுக் கொல்கின்றனர்.

படம் மிகவும் எதார்த்தமாக இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த விதமாக இருப்பது கஷ்டம் காரணம் படத்தில் போராட்டம் கம்யூனிஸ்ட் கருத்துக்கள் இந்த விஷயங்கள் அனைவருக்கும் பிடிக்காது. கடைசியில் நாயகனை சுட்டுக் கொல்வது படத்தின் மீது உள்ள ஆர்வத்தை குறைக்கிறது. மொத்தத்தில் நல்ல படம் ஆனால் அனைவராலும் விரும்பப்படாத படம். இந்த கதையை இன்னும் வேறு மாதிரி கொண்டு சென்றிருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும்.

Also Read : வாணி போஜனிடம் மயங்கி, டேட்டிங் முடித்து கழட்டிவிட்ட 4 நடிகர்கள்.. அடுத்தடுத்து 2 பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்