Connect with us
Cinemapettai

Cinemapettai

pawan kalyan

India | இந்தியா

பவன் கல்யாணை தரைகுறைவாக பேசிய ராம்கோபால் வர்மா.. கொதித்தெழுந்த ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

வித்யாசமான கதைகளாலும் விதவிதமான கதைக்களத்தாலும் தனக்கென்ற தனித்தன்மையை எப்பேதும் விட்டுத்தராமல் படங்களை எடுப்பதில் பெயர் போனவர் தான் ராம் கோபால் வர்மா.

சில பேட்டிகளில் குறிப்பிடும் நேரடியான விடயங்களாலும் டுவிட்டரில் டுவிட்டிவிடும் சில செயல்களாலும் எப்போதும் லைம் லைட்டில் இருப்பவர் RGV என்று அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா.

சமீபத்தில் அவர் டுவிட்டரில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் பவன் கல்யாண் உட்பட சில குடும்பத்தனர் இருக்கும் சிரஞ்சீவி பிறந்தநாள் புகைப்படம் குறித்து ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில் மெகா ஸ்டாரின் புகழை பறிக்கும் ஒட்டுண்ணிகள் மட்டுமே புகைப்படத்தில் உள்ளதாகவும் அதனால் தான் உண்மையிலேயே புகழ்பெறும் வாய்ப்பு இருப்பதால் மட்டுமே அல்லு அர்ஜூன் இந்த புகைப்படத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இன்னொரு பதிவில் மெகா ஸ்டாரின் பட்டத்தை நிச்சயம் அல்லு அர்ஜூன் மட்டுமே பெற முடியும் என பதிவிட்டிருந்தார்.

chiranjeevi family

chiranjeevi family

தெலுங்கு சினிமாவில் தனக்கென ரசிகர்களை பெற்றுள்ள பவன் கல்யான் ராம்சரனின் ரசிகர்கள் கொதித்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் பலராலும் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார். என்னவாக இருந்தாலும் இதுவும் ஒரு பப்பளிசிட்டி தானே என “மீரா மிதுன் ” போல எடுத்துக்கொண்டு தான் போகவேண்டும் போல

Continue Reading
To Top