ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள்

நடிகர் ராமராஜன் நடித்த படங்களை தயாரித்து கொண்டிருந்த ராஜ்கிரண் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். ராஜ்கிரணின் சூப்பர் ஹிட் 5 படங்கள்

ராசாவே உன்ன நம்பி: 1988 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜன், ரேகா,சரிதா, ராதாரவி நடித்து வெளியான இந்த திரைப்படத்தை ராஜ்கிரண் தயாரித்து இருந்தார். இந்த படம் வெள்ளிவிழா கண்டது.

Also Read: இருவரின் வளர்ச்சியை பார்த்து மிரண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாரை காப்பாற்றிய ராஜ்கிரண்

என்ன பெத்த ராசா: 1989 ஆம் ஆண்டு ராஜ்கிரண் கதை எழுதி தயாரித்த படம் ‘என்ன பெத்த ராசா’. ராமராஜன், ரூபிணி, ஸ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

என் ராசாவின் மனசிலே: இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் முதல் திரைப்படம். இந்த படத்தில் தான் ராஜ்கிரண், குழந்தை நட்சத்திரமாக இருந்த மீனா, வடிவேலு என கோலிவுட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் அறிமுகமானார்கள். இந்த படம் வெற்றிவிழா கொண்டாடியது.

Also Read: நன்றியை மறக்காமல் ராஜ்கிரண் செய்த செயல்.. இன்றுவரை கடவுளாய் பார்க்கும் மனிதர்

அரண்மனை கிளி: 1993 ஆம் ஆண்டு வெளியான இந்த அரண்மனை கிளி திரைப்படத்தை ராஜ்கிரண் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம். இந்த படம் பட்டிதொட்டிகளில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

எல்லாமே என் ராசா தான்: 1995 ஆம் ஆண்டு ராஜ்கிரண் கதை எழுதி, இயக்கி , தயாரித்து, நடித்த திரைப்படம் எல்லாமே என் ராசாதான். சங்கீதா, ரூபாஸ்ரீ, KR விஜயா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது.

ராஜ்கிரண் தன்னுடைய எல்லா படங்களிலும் இளையராஜாவை தான் இசையமைக்க வைத்தார். மேலும் இவருடைய படங்களில் அம்மா சென்டிமெண்ட் அதிகமாக இருக்கும்.

Also Read: ஒரு கோடி சம்பளம் வாங்கிய ராஜ்கிரண்.. எந்த படத்திற்கு தெரியுமா..?

Next Story

- Advertisement -