இருவரின் வளர்ச்சியை பார்த்து மிரண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாரை காப்பாற்றிய ராஜ்கிரண்

தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலமாக ஹீரோவாகவே வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். ஒரு காலகட்டத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஹீரோக்களாக கலக்கி வந்தாலும் சிவாஜி வயதான பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மேலும் எம்ஜிஆரும் அரசியலில் இறங்கியதால் சினிமாவை விட்டுவிட்டார்.

ஆனால் தற்போது வரை ஹீரோவாக நடித்து வரும் ரஜினி மற்றும் கமலுக்கு சரிசமமாக இரண்டு நடிகர்கள் அந்த காலத்தில் வளர்ந்து வந்தனர். இந்த இருவரின் நடிப்பை பார்த்து எல்லோரும் மிரட்சி அடைந்தனராம். அதுமட்டுமல்லாமல் இந்த நடிகர்களை பார்த்து ரஜினி, கமல் இருவரும் பயந்து விட்டார்கள் என்ற பல கதைகள் அப்போது கட்டி வந்தனர்.

அதாவது ராமராஜன் மற்றும் ராஜ்கிரணை பார்த்துதான் அந்த காலகட்டத்தில் உள்ள நடிகர்கள் பயந்து உள்ளனர். கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் இவர்கள் இரண்டு பேருமே பின்னி பெடல் எடுக்க கூடியவர்கள். இவர்கள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

அதிலும் ராமராஜனின் கரகாட்டக்காரன் படம் பல வாரங்கள் கடந்தும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருந்தது. அதேபோல் ராஜ்கிரணும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, நல்லி எலும்பை கடிக்கும் ஸ்டைல் என ரசிகர்களை கவர்ந்து இருந்தார். இதனால் இந்த இரு நடிகர்களுக்குமே அப்போது மிகப்பெரிய பெயர் இருந்தது.

அதுமட்டுமல்லாமல் ஒரு முறை ரஜினிகாந்த், ராஜ்கிரணுக்கு போன் செய்து என் படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள், நீங்கள் உங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துக் கொள்ள முடியுமா என கேட்டுக் கொண்டுள்ளாராம். அந்த அளவிற்கு ராஜ்கிரணும், ராமராஜனணும் ரஜினி கமலுக்கு இணையாக வளர்ந்து வந்தனராம்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த இரு நடிகர்களும் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. ராமராஜன் சினிமாவை விட அரசியல் பக்கம் சென்றுவிட்டார். ஆனால் ராஜ்கிரன் அவ்வப்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Next Story

- Advertisement -