Rajinikanth’s vettaiyan and vidaamuyarchi Willingly Comes to Diwali: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களே வெற்றி நடை போடுகின்றன. இதனால் முன்னணி நடிகர்கள் சிலர் மார்க்கெட்டை குறைக்காமல் ஏத்திக் கொண்டே வருகின்றனர்.
தீபாவளிக்கு ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் கோட் ஆகியவை மொத்தமாக ரிலீஸ் ஆகப்போகுதாம்.
வேற வேற தேதிகளில் ரிலீஸ் செய்ய திட்டம் போட்டு வைத்திருந்தாலும், காலத்தின் சூழ்ச்சியால் மூவரின் படங்களும் நேருக்கு நேர் மோத உள்ளன.
இந்த ஆண்டு பொங்கலிலேயே அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த திரைப்படங்கள் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தள்ளிக் கொண்டே வருகிறது.
தலைவர் ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தலைவர் 171 மற்றும் ஜெயிலர் 2 போன்றவை சூப்பர் ஸ்டாருக்காக காத்திருக்கின்றன.
தீபாவளிக்குள் ரெடியாகும் வேட்டையன் மற்றும் விடா முயற்சி
இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் வேட்டையனின் படப்பிடிப்பு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தும் உடல் நிலையில் ஏற்பட்ட தொய்வால் விடாமுயற்சியின் படப்பிலிருந்து சற்று ஓய்வெடுத்து வருகிறார்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விடாமுயற்சியை தான் சொல்லும் நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டுள்ள அஜித் எப்படியும் தீபாவளிக்குள் விடாமுயற்சி ரிலீஸ் செய்யலாம்.
அஜித்தின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி தேதியை அறிவித்துதான் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர் குட் பேட் அக்லி குழுவினர்.
சொல்லி வைத்து அடிக்கும் அஜித் மற்றும் தலைவர் படங்கள் 2025 பொங்கல் ரேஸில் கலந்து கொள்ள உள்ளது.
ஆனால் விஜய் மட்டும் கதை, படம், இயக்குனர் என எந்த ஒரு அறிவிப்பையும் வழங்காது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் அதுபோல் அரசியல் சினிமா இரண்டிலும் குழப்பத்துடனே உள்ளார்.
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராததை செய்வதுபோல், பதுங்கி பாய்வது போன்று அதிரடியாக தீபாவளி ரேசில் தளபதியும் கலந்து கொள்ளலாம்.