விஜய், விஷாலின் பதவி ஆசை.. சூப்பர் ஸ்டார் கொடுத்த நெத்தியடி பதில்

Rajini-Vijay-Vishal: விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. சமீபத்தில் தன் கட்சியின் பெயரை அறிவித்த அவர் 2026 தேர்தல் தான் என்னுடைய இலக்கு என்பதையும் சொல்லிவிட்டார். இதனால் அரசியல் வட்டாரமே தற்போது பரபரப்பாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த சூடு ஆறுவதற்கு முன்பாகவே விஷால் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற ஒரு செய்தி கிடுகிடுக்க வைத்தது. இது வைரலானதை தொடர்ந்து விஷால் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை. மக்கள் பணி செய்வதை என்னுடைய கடமை என்று மனரீதியாக கருதுகிறேன்.

வரும் காலத்தில் இயற்கை ஏதேனும் முடிவெடுத்தால் அப்போது மக்களுக்காக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று தன்னுடைய அரசியல் ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தி இருந்தார். இது பரபரப்பை கிளப்பியதை அடுத்து ரஜினியிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

Also read: விஷால் வாழ்க்கையில் விளையாடிய 3 நடிகைகள்.. ஆறு அடி தம்பிக்கு ஆப்படித்த ஹீரோயின்ஸ்

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டபோது அவர் வாழ்த்துக்கள் என்று கூறி சென்றார். தற்போது மீண்டும் பத்திரிகையாளர்கள் அவரிடம் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் படம் சம்பந்தமான தகவல்களை கொடுத்துவிட்டு அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று முடித்துக் கொண்டார்.

தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் லால் சலாம் படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களால் சந்தோஷத்தில் இருக்கிறார். இதை அடுத்து அவர் லோகேஷ் உடன் இணைய இருப்பதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக வட்டாரமும் ரொம்பவே எதிர்பார்த்து வருகிறது.

Also read: விறகுகடை முதலாளி டு விஜய்யின் ரைட் ஹேண்ட்.. பலரும் அறியாத புஸ்ஸி ஆனந்த் வரலாறு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்