ரஜினி கொளுத்திப் போட்ட அணுகுண்டு.. கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த வேலை

Rajini Reacted Without Thinking: 72 வயதானாலும் எனர்ஜி குறையாமல் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்குமே கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

எப்படி சூப்பர் ஸ்டார் ஒருத்தரோ, அதே போல் ஒரு நடிகரை மற்றொரு நடிகருடன் ஒப்பிட்டு பேசியது இப்போது பெரும் சர்ச்சையாக அமைந்துள்ளது. கொஞ்சம் கூட யோசிக்காமல் ரஜினி கொளுத்தி போட்ட அணுகுண்டு இப்போது நாலா பக்கமும் வெடிக்கிறது

தீபாவளியை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பல பிரபலங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படி மேலே போய் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட குழுவை பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் காமெடி, வில்லன், குணச்சித்திரம் என மூன்றிலும் கலக்கிக் கொண்டிருக்கும் எஸ்ஜே சூர்யா தான் தமிழ் சினிமாவின் ‘அடுத்த நடிகவேள்’ என்று புகழ்ந்திருந்தார். ‘நடிகவேள்’ என்று ரசிகர்கள் எம்ஆர் ராதாவை தான் அழைத்தனர்.

Also read: எம்ஆர் ராதா-வை தண்டிக்க வந்த நீதிபதியே கட்டிப்பிடித்து பாராட்டிய சம்பவம்.. அதுக்குன்னு இப்படியா அசிங்கப்படுத்துவது.?

வம்பை வழியில் இழுத்து போட்டுக் கொண்ட ரஜினி

எஸ்ஜே சூர்யாவை அடுத்த நடிகவேள் என எம்ஆர் ராதாவுடன் ஒப்பிட்டு பேசியது இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இவர் மட்டும் அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்குமே கொடுக்க மாட்டாராம். ஆனால் மற்ற நடிகர்களை இன்னொருத்தருடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் என்று ரஜினிக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மேலும் எம்ஆர் ராதாவை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும். அவர் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தினார். திமுகவிலும் எம்ஆர் ராதா இருந்தார். அண்ணா, பெரியார் எல்லாம் அவருடைய ரசிகர்கள். ஏனென்றால் இவர் எழுச்சி மிகுந்த நாடகங்களை நடத்துவார்.

அப்பவே பெண்ணுரிமைக்காக போராடியவர். உடன்கட்டை ஏறுதல், பெண்களுக்கு மொட்டை அடித்தல் போன்றவற்றை தன்னுடைய நாடகங்களில் வன்மையாக கண்டித்தார். அப்படிப்பட்ட மனிதரை பற்றி தெரியாமல் ரஜினி இப்போது உளறுகிறார். எஸ்ஜே சூர்யாவை அவருடன் கம்பேர் பண்ணி அசிங்கப்படுத்திவிட்டார் என்று பலரும் கொந்தளிக்கின்றனர்.

Also read: 3 மணி நேரத்திற்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 5 படங்கள்.. சலிப்புத் தட்டாத நண்பன்