கேட்டாலே கொடுத்திருப்பேன்.. அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து அதிருப்தியில் ரஜினி

சமீப காலமாகவே அடுத்த உலக நாயகன் யார்? தமிழகத்தில் நம்பர் ஒன் யார்? என்பது குறித்து சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பு ஏற்படும் நிலையில், தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை பிரபல யூடியூப் சேனல் ஒன்றும் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வெளிப்படையாக சொல்லி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆனால் சூப்பர் ஸ்டார் பதவியை யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் ரஜினி திட்டவட்டமாக இருக்கிறார். அதிலும் தான் பார்த்து வளர்ந்த பையன் தன்னையே மிஞ்சி வளர்ந்து வருகிறார் என்பது நல்ல விஷயமாக இருந்தாலும், தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஏன் தரவில்லை என்ற கோபம் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்படுகிறது.

Also Read: தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

ஏனென்றால் பெரிதாக பெயருக்கோ பட்டத்திற்கோ ஆசைப்படாமல் எளிமையை மட்டுமே விரும்பும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் போது வானத்தின் உச்சத்துக்கு சென்று சிறகடித்த பறக்கிறார். அப்படிப்பட்ட பெருமையை தன்னிடம் இருந்து பிடுங்கி விட விஜய் பார்க்கிறாரா என்ற அதிருத்தியில் ரஜினி இருக்கிறார்.

இருப்பினும் இந்தப் பட்டத்தை கேட்டாலே கொடுத்திருப்பேன், இந்த விஷயத்தை எல்லாம் இவ்வளவு தூரம் விஜய் வளர்த்து விட்டிருக்க அவசியமில்லை. என்னதான் சினிமாவில் உயர்ந்தாலும் முன்னோடியாக இருந்த நடிகர்களுக்கு என்றே ஒரு மரியாதை இருக்கும். அந்த மரியாதையை விஜய் கொடுக்க மறுக்கிறாரா! இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே கில்லி எறிந்திருக்கலாம்.

Also Read: அசைவம் சாப்பிட்டால் சீக்கிரம் இறந்து விடுவோமா.? வாய கொடுத்து புண்ணாக்கி கிட்ட சூப்பர் ஸ்டார்

இவ்வளவு தூரம்  பெருசா போக விற்றிருக்கக் கூடாது என்றும் ரஜினிக்கு தோன்றுகிறது. இருப்பினும் எந்த பாக்ஸ் ஆபிஸை வைத்து அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு ஆசைப்பட்டாரோ, அதே பாக்ஸ் ஆபிஸை வைத்து வெயிட் காட்ட வேண்டும் என்றும் ரஜினி ஒரு முடிவுடன் இருக்கிறார்.

இதனால் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு அடுத்ததாக, அவர் நடித்து கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் நாயகன் நான் தான் என்பதை காட்ட வெறிகொண்டு காத்திருக்கிறார். எனவே ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி யாருக்கும் தோன்றக்கூடாது. சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினியின் முகம் தான் தெரிய வேண்டும். இந்தப் பட்டத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது என்பதை ரஜினி உறுதியாக இருக்கிறார்.

Also Read: 16 நாட்களில் வாரிசு படத்தின் ஒட்டு மொத்த வசூல்.. ஆட்டநாயகனாக பாக்ஸ் ஆபிஸையே மிரட்டி விட்ட விஜய்