திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

மணிரத்னத்தால் முடியாமல் போன காரணம் காரியம்.. மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்

Rajini – Kamal : மணிரத்னம் கமலை வைத்து நாயகன் மற்றும் ரஜினியை வைத்து தளபதி படத்தை இயக்கியிருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் இருவருமே வந்திருந்தனர். அப்போது இவர்கள் இருவரையும் சேர்த்து படம் எடுக்க வேண்டும் என்று மணிரத்னம் ஆசைப்பட்டார்.

ஆனால் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் தான் நடிக்க போகிறார். ஒருபுறம் ரஜினியும் செம ஸ்பீடில் அடுத்தடுத்த படங்களை புக் செய்து வருகிறார். இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 படத்திற்கான கதையும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதுதவிர ஐசாரி கணேஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். அதேபோல் கமலும் ஐசாரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி தருவதாக கூறியிருக்கிறாராம். ஆனால் வேல்ஸ் நிறுவனம் இருவரையும் தனித்தனியாக வைத்து படம் இயக்கினால் பட்ஜெட் அதிகமாகும் என்று யோசித்துள்ளது.

Also Read : ஒற்றை பாடல் வரியால் ரஜினியை சீண்டிய சத்யராஜ்.. 38 ஆண்டுகள் ஆகியும் முணுமுணுக்க வைக்கும் பாடல்

ஏற்கனவே அவர்களது தயாரிப்பில் உருவாகி வரும் சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கிறது. இப்போது கமல் மற்றும் ரஜினி இருவரும் நடிக்கும் வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரே பட்ஜெட்டில் எடுத்தால் நல்ல வசூல் பெறலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனராம்.

ஆனால் இருவரையும் வைத்து எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார் போல தான் இயக்குனரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகையால் அதற்கான வேலையில் தான் இப்போது வேல்ஸ் நிறுவனம் இறங்கி இருக்கிறதாம். அந்த இயக்குனர் ஒருவேளை மணிரத்தினமாக இருந்தால் கூட வேற லெவலில் தான் இருக்கும்.

Also Read : கலைஞர் விழாவில் நடந்த தப்புக்கு காரணமான 5 விஷயங்கள்.. இதுவரை பார்க்காத அவமானத்தை சந்தித்த ரஜினி

- Advertisement -spot_img

Trending News