சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கதிரை உருகி உருகி காதலிக்கும் ராஜி.. பாண்டியனின் மூத்த மகன் வாழ்க்கையில் கும்மி அடித்த மச்சான்கள்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், மீனா அவருடைய மூத்த மச்சான் வாழ்க்கையில் பிரகாசத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறார். அந்த பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தத்தை பண்ணிவிடலாம் என்று குடும்பத்துடன் அனைவரும் அவர்கள் வீட்டிற்கு போகிறார்கள்.

போகும்போது கோமதி, ராஜிடம் கதிருக்கு சாப்பாடு கொடுத்து நீயும் காலேஜுக்கு கிளம்பி போ என்று சொல்லுகிறார். அதனால் ராஜி விதவிதமான சாப்பாட்டை செய்து முடிக்கிறார். அத்துடன் கதிரை பழையபடி ஆக்க வேண்டும் என்பதற்காக சூப் வைக்கலாம் என்று முடிவு பண்ணுகிறார். அதற்காக யூடியூப் மூலம் பார்த்து சூப் வைத்து விடுகிறார்.

அடுத்ததாக கதிரிடம் சாப்பிடுறியா என்று கேட்கிறார். ஆனால் கதிர் வழக்கம் போல் ராஜியை திட்டி விடுகிறார். ஆனால் ராஜி, சூப் மற்றும் சாப்பாட்டை எடுத்து வந்து கதிர் முன்னாடி வைக்கிறார். உடனே கதிர் நான் உன்னிடம் எதுவுமே கேட்கவில்லை. நீனா அதிகபிரசங்கித்தனமாக இந்த வேலை எல்லாம் பார்க்காதே என்று கூறுகிறார்.

Also read: முத்து மூலம் மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. மனோஜ்க்கு தெரிய வந்த ரோகினியின் லீலைகள், இதுக்கே இப்படியா!

உடனே ராஜி என் அண்ணன் உன்னை அடித்து காயப்படுத்தி இருக்கிறார். அத்துடன் அத்தையும் போகும்போது உனக்கு சாப்பாட்டை கொடுத்து விடு என்று சொன்னதனால் மட்டும்தான் நான் உனக்கு இதை கொடுக்கிறேன். சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் உன்னுடைய இஷ்டம் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விடுகிறார்.

ராஜி போனதும் கதிர் ஆசையாக சூப்பை எடுத்து குடிக்கிறார். இதனை பார்த்து ராஜி மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொள்கிறார். இப்படியே போனால் இருவருக்குமே காதல் வந்துவிடும். ஏற்கனவே ராஜிக்கு கதிர் மீது காதல் வந்து விட்டது. இதனை அடுத்து பாண்டியனின் மூத்த மகன் சரவணனுக்கு பெண் பார்ப்பதற்காக மீனா அனைவரையும் அந்த வீட்டிற்கு கூட்டிட்டு போய்விடுகிறார்.

அங்கே போனதும் எல்லாம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அத்துடன் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கும் நேரத்தில் பாண்டியன் மச்சானிடம் இருந்து பெண்ணுடைய அப்பாவிற்கு போன் வருகிறது. அந்த வகையில் இல்லாத விஷயங்களை தேவை இல்லாமல் சொல்லி அவருடைய மனசை மாற்றி இந்த பெண்ணும் கிடைக்காத அளவிற்கு பாண்டியனின் மூத்த மகன் வாழ்க்கையில் கும்மி அடித்து விடுகிறார்கள். இந்த விஷயம் மட்டும் பாண்டியனுக்கு தெரிந்தால் கண்டிப்பாக ஒரு பிரளயமே உருவாகும்.

Also read: ரோகினிக்கு மாமியாரும் கணவரும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்.. முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணிய மச்சான்

- Advertisement -

Trending News