கதை முக்கியம் என ராஜமௌலி நிருபித்த படங்கள்.. 5 வேற்று மொழி ஹீரோக்கள் தமிழில் வளர்ந்த கதை

எந்த கதாநாயகராக இருந்தாலும் கூட ஒரு படத்திற்கு கதை இதயம் போன்றது என்பதை நிரூபித்து காட்டியவர் ராஜமவுலி. அக்கடதேச நாயர்களாக இருந்தாலும் தமிழ் மொழியில், அவர்களையும் தன் தெள்ளத் தெளிவான கதை மூலம் வளர்த்து விட்டவர். அப்படி ராஜமவுலியினால் வளர்ந்த ஹீரோவையும், தமிழில் சக்கை போடு போட்ட படத்தையும் பார்க்கலாம்,

நானி: தெலுங்கு திரையுலகில் நேச்சுரல் ஸ்டார் என்று அனைவரும் அறியப்படுபவர் நானி. இவர் ராஜமௌலியின் நான் ஈ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். தெலுங்கில் மட்டும் இல்லை, தமிழிலும் அந்த படம் சக்கை போடு போட்டது.

கிச்சா சுதீப்: நான் ஈ படத்தில் சமந்தாவை அடைய போராடும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சுதீப். இதற்கு முன்னர் தமிழ் சினிமா இப்படி ஒரு வில்லனை பார்த்ததில்லை என்றே கூறலாம். இவரையும் தமிழில் வளர்த்து விட்டவர் ராஜமவுலி தான்.

பிரபாஸ்: அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் பாகுபலி. அமேந்திர பாகுபலி, ராஜமாதா சிவகாமி தேவி, கட்டப்பா, பல்வாழ் தேவன் போன்ற கதாபாத்திரங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். இந்த படம் மூலம் பிரபாஸ் தமிழிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றார்.

ராம்சரண்: சிரஞ்சீவியின் வாரிசான இவர் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து தமிழிலும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து விட்டார். இப்பொழுது சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழிலும் அந்த படம் வெளிவர இருக்கிறது.

ஜூனியர் என்டிஆர்: இவரையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாட காரணம் ராஜமவுலி தான். ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரனுடன் இணைந்து நடித்திருப்பார். பீம் என்ற கதாபாத்திரத்தில் மிருகங்களை வேட்டையாடி வெள்ளைக்காரர்களுக்கு தண்ணீ காட்டிய இவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்