விஜய் இடமிருந்து காவிரியை பிரிக்க ராகினி காட்டும் ஆதாரம்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் நவீன்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், யமுனா நவீனை காதலிக்கிறார் என்கிற உண்மை காவிரிக்கு தெரிந்து விட்டது. அத்துடன் யமுனா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எப்படியாவது நவீனை என்னுடன் சேர்த்து வை என்று காவிரியிடம் கெஞ்சுகிறார். உடனே காவிரியும் நான் நவீன் இடம் பேசிட்டு வந்து உன்னை பார்க்கிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.

இதனை வெளியில் இருந்து பார்த்த ராகினிக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து விட்டது. அதனால் காவிரி எங்கே போகிறார் என்று பின்னாடியே பாலோ பண்ணி போகிறார். பிறகு காவேரி, நவீனை பார்ப்பதற்காக அவனுடைய ரூமுக்கு போகிறார். அங்கே நவீன் மற்றும் காவிரி பேசிக் கொண்டிருப்பதை மறைந்திருந்து ராகினி வீடியோ எடுத்து விடுகிறார்.

விஜய் மனதிற்குள் குழப்பத்தை உண்டாக்கும் ராகினி

காவிரி, நவீன் இடம் யமுனா உன்னை காதலிக்கிறார். கல்யாணம் பண்ணினால் உன்ன தான் பண்ணனும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்று சொல்கிறார். அதற்கு நவீன் என் மனதில் அப்படி ஒரு எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது. யமுனை எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என்று உங்க அப்பா கனவு கண்டார். அந்த கனவை நீ நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டாய். அதனால் உன்னுடைய ஆசை நிறைவேற்றும் விதமாக நான் அவளுக்கு உதவி பண்ணினேன்.

அவ்வளவுதான் எனக்கும் அவளுக்கும் சம்பந்தம். அதனால் இனி இந்த மாதிரியான விஷயத்தை வைத்துக்கொண்டு என்னிடம் வந்து பேசாதே என்று நவீன் சொல்லிவிட்டார். உடனே காவிரி என்னை மன்னித்துவிடு என்று நவீன் இடம் மன்னிப்பு கேட்டு திரும்பி விடுகிறார். வீட்டிற்கு போன காவேரியை பார்த்து யமுனா நவீனிடம் பேசினியா நவீன் என்ன சொன்னான் என்று கேட்கிறார்.

அதற்கு காவேரி, நவீன் இடம் பேசி விட்டேன் உங்க ரெண்டு பேரும் கல்யாணத்தையும் நான் பண்ணி வைக்கிறேன். ஆனால் அதற்கு முன்னாடி நீ கலெக்டர் ஆக வேண்டும். இதுதான் நவீனும் ஆசைப்படுகிறான். அதனால் நீ படிக்கிற வேலையை பாரு மற்றதை எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று காவேரி, யமுனாக்கு வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆனால் இதை தவறாக விஜய் இடம் சொல்ல வேண்டும் என்பதற்காக ராகினி வீடியோவை எடுத்ததை காட்டுகிறார். இன்னும் காவிரி மனதில் நவீன் தான் இருக்கிறான் என்று தவறாக விஜய் மனதிற்குள் ராகினி விஷத்தை கொட்டுகிறார். கண்டிப்பா இந்த ஒரு விஷயம் விஜய் மனதிற்குள் குழப்பத்தை உண்டாக்கும். அத்துடன் இனி காவிரியிடம் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் இனி நவீன் மற்றும் காவிரியை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட போகிறார்.

இன்னொரு பக்கம் காவேரி, யமுனாவையும் நவீனையும்யும் சேர்த்து வைக்க வேண்டும் என்று முயற்சி பண்ணப் போகிறார். ஆக மொத்தத்தில் இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு முழிக்க போவது நவீன். இந்த ராகினி எப்படியாவது விஜய்யிடமிருந்து காவிரியை பிரித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். இன்னும் என்னெல்லாம் ஆக்கப் போர் பண்ணப் போகிறாரோ.

மகாநதி சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -