காவேரி பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ளும் ராகினி.. விஜய் வீட்டில் வெடிக்கப் போகும் பூகம்பம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், யமுனாவின் சுயநலத்திற்காக தற்போது பலிகடாக மாட்டிக் கொண்டது காவேரி வாழ்க்கை. அதாவது ராகினி, அஜய்யை கல்யாணம் செய்துவிட்டால் காவேரிக்கு நிம்மதி கிடைக்காது. ஒவ்வொரு நொடியும் நரகமாக இருக்கும் என்று நவீன் யோசித்து எப்படியாவது ராகினி கல்யாணத்தை தடுக்க வேண்டும் என்று போராடினார்.

இதனால் ராகினி ரகசியமாக கல்யாணம் பண்ற விஷயத்தைத் தெரிந்து கொண்ட நவீன் யமுனாவிற்கு தகவலை கொடுத்து கல்யாணத்தை நிறுத்த பார்த்தார். ஆனால் யமுனா, ராகினிக்கு கல்யாணம் நடந்தால்தான் நம்முடைய ரூட்டு கிளியராக இருக்கும் என்று சுயநலத்தினால் ராகினி கல்யாண விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். இதனால் ராகினி நினைச்ச மாதிரி அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு காவேரி மற்றும் விஜய் இருக்கும் வீட்டிற்கு வந்து விட்டார்.

காவிரி வாழ்க்கையில் குட்டையை குழப்பம் ராகினி

ஆனால் ராகினி கல்யாணம் பண்ணியது காவிரியை பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த வகையில் காவிரியிடம் கூடிய சீக்கிரத்தில் நான் இந்த வீட்டை விட்டு உன்னை துரத்துகிறேன் என்று சவால் விட்டார். இதை பார்த்த விஜய் கடுப்பாகி ராகினி பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கன்னத்தில் பளார் என்று அரை போட்டார்.

இதனால் வாயை மூடிக்கொண்டு ராகினி அஜய் போய்விட்டார்கள். இருந்தாலும் காவேரிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக ராகினி இரவு பகலும் யோசித்துக் கொண்டிருக்கிறார். எப்படியாவது காவிரியை சிக்க வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணும் ராகினிக்கு துருப்புச் சீட்டாக கிடைக்கப் போவது காவேரி மற்றும் விஜய் ஒப்பந்தத்தின்படி கல்யாணம் பண்ணியிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிய வரப்போகிறது.

அப்படி மட்டும் தெரிந்து விட்டால் காவிரி வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று இதை வைத்துக் கொண்டே பிளாக் மெயில் பண்ணி ஒவ்வொரு நிமிடமும் காவிரியை துன்புறுத்த வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த விஷயம் மட்டும் விஜய் வீட்டிற்கும் காவிரி வீட்டுக்கும் தெரிந்து விட்டால் கண்டிப்பாக ஒரு பூகம்பமாக வெடிக்கும்.

ஆனால் இதையெல்லாம் நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்றால் விஜய் மற்றும் காவிரி அவர்கள் மனதிற்குள் இருக்கும் காதலை ஒருவரை ஒருவர் தெரிவித்துக் கொண்டு மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள் என்றால் ராகினி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்.

ஆனால் இப்பொழுது வரை காவிரி மனதில் விஜய் இருப்பதும், விஜய் மனதில் காவேரி இருக்கிறார் என்ற விஷயமும் தெரியப்படுத்தாமல் காலம் போன போக்கில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்குள் புகுந்து ராகினி குட்டையை குழப்புவதற்கு முன் விஜய் ஒரு நல்ல முடிவை எடுத்தால் காவேரி வாழ்க்கை தப்பித்து விடும்.

மகாநதி சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -