தங்கையின் காதலுக்காக நவீனிடம் தூது போகும் காவேரி.. யமுனாவால் விஜய் மனதில் ஏற்படும் குழப்பம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி விஜய்யுடன் சேர்ந்து ஆபீஸ்க்கு போகிறார். போகும்போது காவிரி ரொம்பவே சந்தோசமாக வரும் நிலையில் விஜய் காவேரியிடம் என்ன ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் என்ன என்று சொல்லும் நானும் சந்தோஷமாய் விடுவேன் என்று கேட்கிறார்.

அதற்கு காவிரி இல்ல பாஸ் அந்த ராகினியே கடுப்பேத்தும் விதமாக நாம் இரண்டு பேரும் சேர்ந்து செய்த விஷயத்தை நினைத்து பார்த்து சந்தோஷப்படுகிறேன் என்று சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் இனி ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் அவமானப்பட்டு தோற்று நிற்கப் போகிறார் என்று விஜய் கூறுகிறார். ஆக மொத்தத்தில் விஜய் மற்றும் காவிரி இருவரும் சேர்ந்து ராகினிக்கு தினந்தோறும் குடைச்சல் கொடுக்கப் போவது உறுதியாகிவிட்டது.

காவேரி மற்றும் விஜய்க்கு ஏற்படப் போகும் விரிசல்

இப்படி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு போகும் பொழுது அந்த வழியாக யமுனா போகிறார். அப்பொழுது யமுனாவை பார்த்த காவேரி, ஏன் இந்த வழியாக போக வேண்டும் என்று யோசித்து விஜய் இடம் ஒரு வேலை இருக்கு என்று சொல்லி இறங்கி விடுகிறார். உடனே யமுனாவை பின் தொடர்ந்து காவிரி போகிறார்.

அந்த சமயத்தில் யமுனா ஒரு வீட்டிற்கு சென்று கதவை தட்டுகிறார். கதவை திறந்து வெளியே வந்து நிற்கிறார் நவீன். இவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியாகி காவிரி மறைந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்கிறார். அப்பொழுது யமுனா நான் பண்ணியது தவறுதான் என்னை மன்னித்து விடுங்கள் என்று நவீன் இடம் கெஞ்சுகிறார். ஆனால் நவீன், நீ இந்த மாதிரி வந்து என்கிட்ட பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

உன்னுடைய லட்சியம் எதுவோ அதை நோக்கி போ. என்னை தொந்தரவு பண்ணாத என்று நவீன் வேண்டாம் வெறுப்பாக யமுனாவை பார்த்து பேசுகிறார். ஆனால் யமுனா கெஞ்சி எப்படியாவது நவீன் இடம் பேச வேண்டும் என்று அழுது புலம்புகிறார். கடைசி வரை நவீன், யமுனாவிடம் பேசத் தயார் இல்லை என்று வெறுத்து ஒதுக்கி விட்டார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் யமுனா அழுது கொண்டே வருகிறார். உடனே காவிரி, யமுனாவை சந்தித்து இங்கே என்ன பண்ணுகிறாய் என்று கேட்கிறார். அப்பொழுது காலேஜுக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிய நிலையில் காவிரி இது என்ன அந்த வழியா? இது கூட எனக்கு தெரியாதா என்னிடம் என்ன மறைக்கிறாய் என்று அதட்டி கேட்கிறார்.

அதுடன் யமுனாவை கூட்டிட்டு விஜய் வீட்டு ஒரு அறைக்கு சென்று கதவை லாக் பண்ணிட்டு விசாரிக்கிறார். அப்பொழுது யமுனா, நவீனை காதலிப்பதாகவும் அவர் இல்லை என்றால் என்னால் இருக்க முடியாது என்று சொல்கிறார். உடனே காவிரி, நவீன் உன்னை காதலிக்கிறாரா என்று கேட்கும் பொழுது, ஆமாம் அவரும் என்னை காதலிக்கிறார் என்று பொய் சொல்லி விடுகிறார்.

இதைக் கேள்விப்பட்ட காவேரி அப்படி என்றால் உங்கள் இருவரையும் நான் சேர்த்து வைக்கிறேன். ஆனால் அதற்கு முன் நீ உன் லட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி யமுனாவை அனுப்பி வைக்கிறார். இதை வெளியிலிருந்து கேட்க முயற்சி பண்ண ராகினிக்கு சரியாக கேட்கவில்லை என்பதால் குழப்பத்தில் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவிரி நவீன் இடம் பேச முயற்சி எடுக்கப் போகிறார்.

ஆனால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாத நிலையில் விஜய் இவர்களை பார்த்து தவறாக புரிந்து இன்னும் காவேரி மனதில் நவீன் இருக்கிறார் என்று ஒரு சந்தேகம் வரப்போகிறது. இந்த சந்தேகம் காவேரி மற்றும் விஜய்க்குள் ஏற்பட போகும் விரிசலாகவும் மாறப்போகிறது. ஆக மொத்தத்தில் இந்த யமுனாவால் ஒருத்தரும் நிம்மதி இல்லாமல் நிலைகுலைந்து நிற்கப் போகிறார்கள்.

மகாநதி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -