மாமியார் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கும் ராதிகாவின் அம்மா.. நிரந்தரமாக பிரிய போகும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா குழந்தை கலைந்ததற்கு முழுக்க முழுக்க காரணம் கோபியின் அம்மா தான் என்று ராதிகா மற்றும் அவருடைய அம்மாவும் நினைக்கிறார்கள். அந்த வகையில் கோபியிடம் பேசும் பொழுது ராதிகா அம்மா, ஈஸ்வரியை தவறாக பேசி கொலைகாரி என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசுகிறார்.

இதனால் கோபப்பட்ட கோபி, ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கி விட்டார். உடனே ராதிகா, கோபி சட்டையை பிடித்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் கோபி நான் எதற்கு கேக்கணும். என் மீது எந்த தப்பும் இல்லை உங்க அம்மா பேசிய பேச்சுக்கு எனக்கு இப்படித்தான் கோபம் வரும் என்று சொல்லிவிட்டார்.

மகளின் வாழ்க்கையை கெடுக்கும் ராதிகாவின் அம்மா

உடனே ராதிகாவும், அம்மாவும் சென்டிமென்டாக பேசி கோபி ரொம்பவே அவருடைய குடும்பத்திற்கும் அம்மாவுக்கும் சப்போர்ட் பண்ணுகிறார். இவரை நம்பி எப்படி உன்னுடைய வாழ்க்கை இருக்கப் போகிறது என்று ராதிகாவை நோகடிக்கும் வகையில் ராதிகாவின் அம்மா பேசி விட்டார். பிறகு கோபி வீட்டுக்கு வந்த நிலையில் யாருமே காணவில்லை என்று மாமியாரிடம் ராதிகாவும் மயூவும் எங்கே என்று கேட்கிறார்.

எதுவுமே பதில் சொல்லாத நிலையில் கோபி மறுபடியும் கேட்ட நிலையில், அவர்கள் எங்கே போனா உங்களுக்கு என்ன. என் மகளை நிம்மதியாக இருக்க விடுங்க என்று சொல்லி மறுபடியும் கோபியின் அம்மாவை கொலைகாரி என்கிற மாதிரி ராதிகாவின் அம்மா பேசுகிறார். கடுப்பான கோபி மறுபடியும் ராதிகாவின் அம்மா மீது கோபப்பட்டு விடுகிறார்.

உடனே இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று ராதிகாவின் அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி என் மகளின் மாமியார் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கிறார். அந்த வகையில் வயிற்றில் இருக்கும் குழந்தை கலைந்ததற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று கம்ப்ளைன்ட் பண்ணி விட்டார்.

இதற்கிடையில் ஈஸ்வரியின் மனநிலைமையை மாற்றி பழையபடி கொண்டு வர வேண்டும் என்று கும்பகோணத்துக்கு கூட்டிட்டு போன பாக்கியா, ஈஸ்வரியின் தோழியே வரவழைத்து இருவரையும் நன்றாக பேச வைத்து மாமியாரை சந்தோஷப்படுத்தி விட்டார். இந்த நிலையில் ராதிகாவின் அம்மா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தது மறுபடியும் ஈஸ்வரிக்கு பிரச்சினையாக வரப்போகிறது.

இதெல்லாம் கேள்விப்பட்ட கோபி, ராதிகாவிடம் கொடுத்தகேசை வாபஸ் வாங்க சொல்லி கேட்க போறார். ஆனால் ராதிகா அவருடைய அம்மா பேச்சைக் கேட்டு கோபியை உதாசீனப்படுத்தி கோர்ட்டு கேஸ் என்று ஈஸ்வரியை அலைய வைக்கப் போகிறார். மேலும் பாக்யா வீட்டில் இல்லாததால் ஜெனி மற்றும் அமிர்தாவிற்கு வாக்குவாதம் வர ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் நீ நான் என்று போட்டி போட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். இதில் ஜெனி, அமிர்தாவை குறை சொல்வதும், அமிர்தா ஜெனியை குறை சொல்லுவதுமாக இரண்டு பேரும் போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் வீட்டுக்கு வரும் பாக்கியாவிற்கு நாலா பக்கமும் பிரச்சனை காத்துக் கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -