ஈஸ்வரியை தவறாக பேசிய மாமியாரை அடிக்க கை ஓங்கிய கோபி.. விவாகரத்து பண்ணப் போகும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி நிம்மதியை தொலைத்துக் கொண்டு தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். இதனால் வழக்கம் போல் குடித்த கோபி, சுயநினைவு இல்லாததால் நடுரோட்டில் தகராறு பண்ணினார். இதை பார்த்த எழில் மற்றும் செழியன், அப்பாவை பாதுகாப்பாக வீட்டிற்கு கூட்டிட்டு வந்து ராதிகாவிடம் ஒப்படைத்து விடுகிறார்.

பிறகு ராதிகா, கோபி நிலைமையை பார்த்து திட்டுகிறார். அத்துடன் ராதிகாவின் அம்மாவும் ஓவராக பேசினார். இதனால் கோபி ராட்சசி மாமியார் எப்பொழுது எங்களுக்கு இடையில் வந்தாரோ, அப்பொழுதே நிம்மதி இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கோபி மனதில் பட்ட ஆதங்கத்தை வெளிப்படையாக பேசி விட்டார்.

கோபியை மன்னிப்பு கேட்க சொன்ன ராதிகா

இதனை பார்த்த ராதிகாவின் அம்மா மறுநாள் ராதிகாவிடம் நான் உனக்கு என்ன வேணும்னாலும் இங்கே செய்து தருகிறேன். ஆனால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து என்னை தர குறைவாக பேசிய உன் வீட்டுக்காரருக்கு என்னால் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார். நான் உனக்காக தான் இங்கே இருக்கிறேன். ஆனால் என்ன போய் இப்படி ராட்சசி என்று அசிங்கப்படுத்திவிட்டார் உன் வீட்டுக்காரர் என்று ராதிகாவிடம் போட்டுக் கொடுக்கிறார்.

உடனே ராதிகா, கோபி எழுந்ததும் நேற்று குடித்து விட்டு வந்ததும் இல்லாமல் என் அம்மாவை தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்தி இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார். உடனே ராதிகா அம்மாவும் கோபியிடம் சண்டை போட்டு ஈஸ்வரியை பற்றி தவறாக பேசுகிறார். இதை கேட்ட கோபி, என் அம்மாவை பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கோபத்தில் மாமியாரை அடிப்பதற்கு கை ஓங்கி விட்டார்.

அதற்கு ராதிகா என் அம்மாவை எப்படி நீங்கள் அடிக்க கை ஓங்குவீர்கள் என்று கோபியின் சட்டை பிடித்து கேள்வி கேட்கிறார். அப்பொழுது கோபி உன் அம்மா ஏன் எப்ப பார்த்தாலும் எங்க அம்மாவை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று சொல்கிறார். உடனே ராதிகா என் அம்மா அப்படித்தான் பேசுவாங்க. ஏனென்றால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்.

அத்துடன் நீங்கள் எங்க அம்மாவை அடிக்க கை ஓங்குனதுக்கு அவர்களிடம் இப்பொழுது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராதிகா பிடிவாதம் பிடிக்கிறார். ஆனால் கோபி என்னால மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

இதனால் ராதிகா என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் பொழுது ராதிகாவின் அம்மா குட்டையை குழப்பி கோபி பற்றி தவறாக ராதிகாவிடம் வத்தி வைக்கிறார். உடனே ராதிகா, இனி இப்படிப்பட்ட கோபி எனக்கு தேவை இல்லை என்று முடிவெடுக்கப் போகிறார்.

அந்த வகையில் கூடிய விரைவில் கோபியை விவாகரத்து பண்ணும் விதமாக கோர்ட் வாசலில் போய் நிற்கப் போகிறார். அப்பொழுதுதான் இந்த புத்தி கெட்ட கோபிக்கு பாக்கியாவின் அருமை புரியப்போகிறது. ஆனாலும் காலம் கடந்து தவறை உணர்ந்த கோபி கடைசியில் ஒன்னும் இல்லாமல் தான் நிற்கப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -