ரெண்டு பொண்டாட்டி இருந்தும் தனிமையில் வாடும் கோபி.. புருசனே வேண்டாம் என முடிவு பண்ணிய ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி நம்மை நம்பி வந்த அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் கவலைப்படுகிறார். அதே நேரத்தில் ராதிகாவும் எல்லாம் உங்களாலும் உங்க அம்மாவாலும் தான் எனக்கு பிரச்சனை வந்தது என்று கோபி மீது கோபப்படுகிறார். இதனால் ராதிகா மற்றும் கோபிக்கு இடையே விரிசல் ஏற்பட்டு விட்டது.

இதனை இன்னும் பெரிதுபடுத்தும் வகையில் ராதிகாவின் அம்மாவும் இடையில் புகுந்து பல சதிகளை செய்து ஒரேடியாக பிரிந்து போவதற்கு கோபியிடம் வம்பு இழுக்கிறார். அந்த வகையில் ராதிகா செக்கப் காக மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். கூடவே ராதிகாவின் அம்மாவும், மகள் மயூவும் கிளம்புகிறார்கள். இதை பார்த்து கோபி எங்கே போகிறார்கள் என்று கேட்கிறார்.

டம்மி பீஸ் ஆக சுற்றும் கோபி

அதற்கு ராதிகா நான் எதற்கு உங்ககிட்ட சொல்லிட்டு போனோம். நீங்க என்ன பண்றீங்க என்று எங்களிடம் சொல்கிறீர்களா என சண்டையே ஆரம்பிக்கிறார். ஆனால் கடைசிவரை ராதிகா சொல்லாத நிலையில் மயூ தான் அம்மாவை கூட்டிட்டு செக்கப்புக்காக ஆஸ்பத்திரிக்கு போகிறோம் என்று சொல்கிறார். உடனே கோபி நான் கூட்டிட்டு போகிறேன். நீ என் தனியா போக வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்கு ராதிகாவின் அம்மா நாங்கல்லாம் கூட போகிறோம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்க உங்க வேலையை போய் பாருங்க என்று சொல்லி விடுகிறார். பிறகு கோபி, மயூவை விட்டுட்டு போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் ராதிகா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நாங்க பார்த்துக் கொள்கிறோம் என்று எல்லாரும் கிளம்பி விடுகிறார்கள்.

அடுத்ததாக பாக்யா கும்பகோணத்திற்கு மாமனார், மாமியார், மகளை கூட்டிட்டு வந்து விடுகிறார். அங்கே வந்ததும் ஈஸ்வரி மனது கொஞ்சம் மாறிவிடுகிறது. அப்பொழுது அங்கே பழகின இடங்களையும் நண்பர்களையும் பற்றி சொல்கிறார். உடனே பாக்யா அந்த தோழியை கூட்டி வந்து அத்தை இடம் பேச வைத்தால் முழுமையாக சந்தோஷமடைவார்கள் என்று அதற்கான வேலையை பார்க்கப் போகிறார்.

இதனை தொடர்ந்து ராதிகா செக்கப் முடித்து வீட்டுக்கு வருகிறார். அப்பொழுது கோபி என்ன ஆச்சு ராதிகா எல்லாம் சரியாயிட்டா என்று அனுசரணையாக கேட்கிறார். அதற்கு ராதிகா எதுவும் பதில் சொல்லாத நிலைமையில் ராதிகாவின் அம்மா நல்ல ரெஸ்ட் எடுத்து சாப்பிட்டு உடம்ப பார்த்துக்க சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் நீங்கள் இருக்கும் வரை என் பொண்ணுக்கு எங்க சந்தோசம் இருக்கப்போகிறது என்று குத்தி காட்டி பேசுகிறார்.

உடனே கோபி, ஏன் அத்தை இப்படி குதர்க்கமாகவே பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு உங்க அம்மா பண்ணின காரியத்துக்கு நான் கம்பி எண்ண வைத்திருக்க வேண்டும். அவர்களை சும்மா விட்டது என் தப்பு என்று மறுபடியும் ஈஸ்வரியை தப்பாக பேசுகிறார். உடனே கோபப்பட்ட கோபி சத்தமாக பேசிய நிலையில் ராதிகா வந்து என் அம்மா அப்படி தான் பேசுவாங்க.

ஏனென்றால் நாங்கள் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து இருக்கிறோம். உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் இங்கே இருக்க அவசியம் இல்லை. இங்கே இருப்பதும் ஒன்னு இல்லாமல் வெளியே போவதும் எனக்கு ஒன்னு தான் என்று ராதிகா கோபியை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தும் அளவிற்கு பேசி விட்டார்.

இதனால் கோபி வருத்தத்தில் வழக்கம் போல் குடிக்க போய்விட்டார். அங்கு போய் நண்பரிடம் ராதிகா புருஷனை வேண்டாம் என்று என்னை ஒதுக்கி விட்டார் என்று புலம்புகிறார். இப்படியே போனால் கடைசியில் கோபி, ராதிகா மற்றும் பாக்கியா யாருமில்லாமல் தன்னந்தனியாக தனிமையில் வாழ போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -