ஓட்டுக்காக பலமா உருட்டும் ராதிகா.. விஜய பிரபாகரன் எனக்கு என்ன உறவு தெரியுமா?

Radhika Talk about Vijayakanth’s son being my son also for getting votes: “உலகமே நாடக மேடை! அதில் நாம் அனைவரும் நடிகர்கள்!” என்ற கவிஞரின் கூற்றுக்கு இணங்க பலரும் பலவகையில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகின்றனர்.

தேர்தல் வந்து விட்டால் நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் நல்லவர்களாகவும் மாறுவது நடைமுறை சாத்தியமே.

பேரன்பு கொண்ட பெரியோர்களே! என அவர்கள் ஆற்றும் சொற்பொழிவை கேட்டால்! அடிக்கும் வெயிலில் மக்களும் உருகித்தான் போகிறார்கள்

கோடை வெயில் அனலை கற்கும் இந்த வேளையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகமே பிரச்சாரத்தால் கொழுந்து விட்டு எரிகிறது. பிரபலங்கள் பலரும் தேர்தலில் களமிறங்க உள்ளனர்.

தமிழகமே உற்று நோக்கும் தொகுதியாக விருதுநகர் அமைந்துள்ளது.  அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அதே தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் அவர்கள் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார்.

இதனால் செலிபிரிட்டி தொகுதியாக மாறி உள்ள விருதுநகர் தொகுதியில் அனல் பிறக்கும் பிரச்சாரம் தொடங்கியுள்ளது.

நிருபர்கள் சந்திப்பின் போது காரசாரமாக பேசிய ராதிகா அவர்கள், விருதுநகர் தொகுதி நாங்களா கேட்கவில்லை பாஜக தலைமை என்னை போட்டியிட சொன்னது.  

ஓட்டு சேகரிக்க பலமாக உருட்டும் ராதிகா

இந்தத் தொகுதியில் ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது. நான் எம்பி ஆனால் இங்கு உள்ள பட்டாசு தொழிற்சாலையில் விபத்தில் ஒருவர் கூட உயிர் இழக்க விடமாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்

மேலும் தன்னை எதிர்க்கும் சகபோட்டியாளரான விஜய பிரபாகரனை குறித்து  பேசும்போது, பிரபாகரன் தன் மகளுடன் படித்தவர் தான் என்று கூறினார்.

விஜயகாந்தின் மகன், எனக்கும் மகன் போல தான், அவர் நலமுடன் இருக்க வேண்டும் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று கூறி சென்றார்.

“ஓட்டு வாங்க என்னலாம் பேசுறாங்கய்யா..!” என்று கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யும் போதே அதை தவிர்க்கவில்லை, மகன் போல என்று மகனை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். விஜயகாந்தின் மகன் இந்த தொகுதியில் நிற்கிறார் என்று தெரிந்து தான்  வேண்டுமென்றே போட்டியிடுகிறார் ராதிகா.

அதன் பின்பும் விஜயகாந்த் ரசிகர்களின் ஓட்டுக்களை வாங்கவே இப்படியான பேச்சுகளை பேசுகிறார் என்று கலாய்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

2024 பாராளுமன்ற தேர்தல் பலருக்கும் பலவித அனுபவங்களை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்