சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கோபி.. வாண்டடாக பாக்கியாவிடம் அசிங்கப்பட்ட ராதிகா

Bhakkiyalakshmi Serial: சன் டிவியில் எந்த அளவுக்கு எதிர்நீச்சல் சீரியலை அனைவரும் பார்த்து வருகிறார்களோ, அதே மாதிரி விஜய் டிவியில் பார்க்கக்கூடிய ஒரே நாடகம் பாக்கியலட்சுமி ஆக இருந்தது. அதனால் இந்த நாடகம் டிஆர்பி யில் முதல் இடத்தில் கொஞ்ச நாட்களாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது போற போக்க பார்த்தா கூடிய சீக்கிரம் இந்த நாடகத்துக்கு எண்டு கார்டு போடுவாங்க போல.

அந்த அளவிற்கு கதையே இல்லாமல் சமையல் ஆர்டர், கேண்டீன், இங்கிலீஷ் டியூஷன், காலேஜ் மற்றும் பொறுப்பான குடும்ப தலைவி. இது ஆரம்பத்தில் பார்க்க நன்றாக இருந்தாலும் போகப் போக தொடர்ந்து இந்த விஷயங்களை வைத்து குண்டச்சட்டிக்குள்ளே குதிரையை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள்.

Also read: பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. கொஞ்ச நெஞ்ச டிஆர்பியும் போச்சு

அதற்கேற்ற மாதிரி ராதிகாவும் பாக்யாவை பழி வாங்குவதும், அவமானப் படுத்துவதுமாகத்தான் முழு வேலையாக பார்த்து வருகிறார். இதில் போதாக்குறைக்கு கோபி வேற. அதாவது பாக்கியா, பழனிச்சாமிடம் பேசுவது பிடிக்காமல் பொறாமையில் பொங்கி வருகிறார். இது இவருடைய அடி மனதிற்குள் பாக்யா தன்னுடைய மனைவி என்ற நினைப்பு இருக்கிறதுனால.

அதே நேரத்தில் பாக்கியா வாழ்க்கையில் தோற்றுப் போய் கஷ்டப்படனும் என்று பல வேலைகளை அற்பத்தனமாக செய்து வருகிறார். அதாவது ரெட்ட வேஷம் போடுவது போல் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். அதன் விளைவாகத்தான் ராதிகாவிடம், கேண்டினில் இருந்து எப்படியாவது பாக்யாவை வெளியே அனுப்பிவிடு என்று கூறியிருக்கிறார்.

Also read: எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கே டப் கொடுத்த குடும்ப சீரியல்.. கலைமாமணி விருது வென்ற முதல் தமிழ் சீரியல்

அதற்கு ஏற்ற மாதிரி பாக்யாவின் கேண்டினில் சமைத்த உணவுகளில் உப்பு இல்லாததால் நிர்வாகத்தில் உள்ளவர்கள் இவரை வெளியே அனுப்பி விடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் பழனிச்சாமி, பாக்கியாவை ஊக்குவித்து நிர்வாகிகளிடம் மறுமுறை பேச சொல்கிறார். அவரும் இதுதான் கடைசி இந்த ஒரு முறை என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி கெஞ்சுகிறார்.

உடனே அவர்களும் தவறு நடக்கிறது எதார்த்தம் தான் இனிமேல் இந்த மாதிரி நடக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று மன்னித்து விடுகிறார். இதனால் வழக்கம்போல் பாக்யாவிடம் வாண்டடாக போய் அவமானப்பட்டு நிற்கிறார் ராதிகா. இதற்குப் பிறகாவது அடுத்த கட்டமாக விறுவிறுப்பான கதையை வைத்து பாக்கியலட்சுமி நாடகத்தை கொண்டு வந்தால் டிஆர்பி யில் முதலிடத்திற்கு வந்து விடலாம்.

Also read: ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

- Advertisement -

Trending News