திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. கொஞ்ச நெஞ்ச டிஆர்பியும் போச்சு

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை ஊக்கவிக்கும் விதமாக பாக்கியலட்சுமி தொடரை இயக்குனர் எடுத்து வருகிறார். ஆரம்பத்தில் டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற்ற இந்த தொடர் சமீபகாலமாக சரிவை சந்தித்து வருகிறது.

இதற்கு காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தான். அந்தத் தொடருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ள நிலையில் விஜய் டிவியின் சீரியல்கள் மந்தம் அடைந்து வருகிறது. ஆனாலும் இதில் பாக்கியலட்சுமி தொடர் ஓரளவு நல்ல டிஆர்பியை பெற்று வந்தது. இப்போது அதற்கும் ஆபத்து ஏற்பட்டது போல் முக்கிய பிரபலம் ஒருவர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலக இருக்கிறார்.

Also Read : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு

அதாவது இரண்டு குடும்பத்தை மட்டுமே மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பாக்யாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். அதில் இரண்டாவது மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே விஷால். இவருடைய மனைவியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை மனதை கவர்ந்த ரித்திகா பாலா உடன் செய்யும் சேட்டை ரசிக்கும் படியாக அமைந்தது. இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது தான் அவரது காட்சி அதிகம் காட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திடீரென பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரித்திகா வெளியேறுகிறார்.

Also Read : அண்ணன், தம்பி பாசத்தை அடிச்சுக்க ஆளே இல்லை.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் இத்தொடரை விட்டு வெளியேறுவதால் இருக்கும் கொஞ்ச நெஞ்ச டிஆர்பியும் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ரித்திகாவுக்கு பதிலாக நடிகை அக்ஷிதா நடிக்க இருக்கிறார். இவர் காற்றுக்கென்ன வேலி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் பாசிட்டிவ் கதாபாத்திரம் என்பதால் ரசிகர்கள் இவரை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இன்னும் சில எபிசோடுகளில் மட்டுமே ரித்திகா பங்கு பெற உள்ள நிலையில் அடுத்ததாக அக்ஷிதா என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும் அவர் வந்த பிறகு தான் கதையில் ஏதாவது மாற்றம் கொண்டு வரப் போகிறார்களா என்பது தெரியவரும்.

Also Read : குணசேகரன் மாதிரி மிருகமாக மாறிய கதிர்.. போலீஸ் கஸ்டடியில் ஜீவானந்தம், கைவிட்ட அப்பத்தா

- Advertisement -

Trending News