எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கே டப் கொடுத்த குடும்ப சீரியல்.. கலைமாமணி விருது வென்ற முதல் தமிழ் சீரியல்

விருதுகள் என்பது வெள்ளித்திரைக்கு மட்டும் தான் என்ற கோட்பாடுகள் மாறி சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு அவர்களுக்கும் விருதுகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சிகளான விஜய் டிவி, சன் டிவி உள்ளிட்ட சீரியல்களில் அந்தந்த சேனல்கள் விழா வைத்து சின்னத்திரை நடிகர்களுக்கு விருது வழங்கி வருகின்றனர்.

இதில் பல போட்டிகளையும், நாமினேஷனையும் மீறி மக்களுக்கு பிடித்த நடிகர்கள் விருது வாங்கியது அவர்களே வாங்கிய சந்தோஷத்தை சீரியல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் முக்கியமாக
டிஆர்பியில் இடம் பிடித்த சீரியல்களுக்கு எத்தனை விருதுகள் கிடைத்துள்ளது என்பதை காணவும், சின்னத்திரை முதல் வெள்ளித்திரையினர் வரை எதிர்பார்க்கும் அளவுக்கு சின்னத்திரை நடிகர்களுக்கு விருதுகள் முக்கியமானதாக மாறிவிட்டது.

Also Read: ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

இதனிடையே தமிழ் சின்னத்திரை வரலாற்றிலேயே முதல் முறையாக கலைமாமணி விருதினை பிரபல சீரியல் வாங்கியுள்ளது. பொதுவாக கலைமாமணி விருது என்பது வெள்ளித்திரையில் பல படங்களை நடித்து பெரும் சாதனை படைத்தவர்களுக்கே இவ்விருது தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும். ஒருமுறை அந்த பிரபலம் கலைமாமணி விருது வாங்கிவிட்டால் அவர்களது பெயருக்கு முன்னாள் கலைமாமணி என்ற பட்டம் கம்பீரமாக இடம்பெறும்.

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த், ஜோதிகா, சிம்ரன், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இவ்விருதினை வாங்கியுள்ளனர். இதனிடையே சன் டிவியில் ஒளிபரப்பான குடும்ப சீரியலுக்கு இவ்விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிஆர்பியில் முன்னிலையில் உள்ள குடும்ப சிரியல்களான எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களின் அடிப்படையே இந்த சீரியல் தான்.

Also Read: அப்போ இருந்த சீரியலுக்கும், இப்போ இருக்க சீரியல்களுக்கும் உள்ள 5 வித்தியாசங்கள்.. படுக்கையறை காட்சிகளில் சினிமாவையே மிஞ்சும் சீன்கள்

இப்படி பல பேருக்கும் புகழுக்கும் சொந்தமாகி, ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற சீரியல் தான் மெட்டி ஒலி. இயக்குனர் திருமுருகன் இயக்கிய இந்த சீரியல் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 811 எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் கொண்டாடிய மெகாஹிட் சீரியல் எனலாம். 5 அக்கா, தங்கைகள் தாயில்லாமல் தகப்பனின் அரவணைப்பில் வளர்ந்து கணவன், மாமியார் வீட்டுடன் அவர்களது வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.

அக்கா, தங்கைகள் என்றால் இப்படித்தான் பாசமாக இருக்கவேண்டும், கணவன் என்றால் மனைவி மற்றும் அவள் கூட பிறந்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது தான் மெட்டி ஒலி சீரியல் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெற்றிகண்டதற்கு காரணம். இதனிடையே 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பாக சிறந்த தமிழ் சிரியலுக்கான கலைமாமணி விருது மெட்டி ஒலி சீரியலுக்கு வழங்கப்பட்டது. இந்த சீரியல் தான் தற்போது வரை முதலும், கடைசியுமாக கலைமாமணி விருது வாங்கிய பெருமையை கொண்டுள்ளது.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

Next Story

- Advertisement -