வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

Bhakkiyalakshmi Serial Artist Salary: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலை பொருத்தவரை பாக்கியலட்சுமி நாடகத்தால் தான் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து வருகிறது. அதிலும் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளையடிக்கும் விதமாக பெண்களால் முடியாதது எதுவும் இல்லை, அவர்கள் நினைத்தால் தனியாகவும் இருந்து சாதித்துக் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக பாக்கியலட்சுமி கதை நகர்ந்து வருகிறது.

டிஆர்பி ரேட்டிங்கே இவர்களால் தான் அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ற மாதிரி தான் இவர்களுடைய சம்பளமும் இருக்கும். அப்படி இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பார்க்கலாம். இந்த நாடகத்துக்கு பில்லர் ஆக இருக்கும் பாக்கியாவிற்கு ரூபாய் 15,000 சம்பளம் வழங்கப்படுகிறது.

Also read: நடுத்தெருவில் நிற்கும் ராதிகா கோபி.. சவாலில் ஜெயிக்கப் போகும் பாக்கியா

அடுத்ததாக இவருடைய நடிப்புக்காக தான் நாங்கள் அனைவரும் இந்த சீரியலை பார்த்து வருகிறோம் என்று சொல்வதற்கு ஏற்ப நடிப்பின் நாயகனாக விளங்கக்கூடிய கோபிக்கு சம்பளம் 12000 ரூபாய். மேலும் என்னதான் கழுவி கழுவி ஊத்துனாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று நடித்து வரும் ராதிகாவின் சம்பளம் 12000. நாடகத்தில் மட்டும் தான் இவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றால் சம்பளம் கூட ஒன்றாக தான் இருக்கிறது.

அடுத்து பாக்கியாவின் மகன்களாக இருந்தாலும் எண்ணங்களைப் பொறுத்தவரை இரு துருவங்களாக இருக்கக்கூடிய செழியன் மற்றும் எழிலுக்கு 10000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் ஆரம்பத்தில் இருந்து கேரக்டர் மாறாமல் நல்ல மனைவியாகவும், மருமகளாகவும் இருந்து மாமியாருக்கு சப்போர்ட் செய்து வரும் ஜெனிக்கு 10000 ரூபாய் சம்பளம்.

Also read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

அடுத்ததாக இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் செல்லக்குட்டியாக இருந்து வரும் இனியாவிற்கு 8000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர் பெயருக்கு தான் செல்ல குட்டி இவருடைய செய்கையை பார்த்தால் அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும்.

அடுத்து லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து கலக்கிக் கொண்டிருக்கும் பழனிச்சாமிக்கு தான் அதிக சம்பளம். இவருக்கு 30,000 ரூபாய் கொடுக்கிறார்கள். ஏனென்றால் இவர் என்னதான் நாடகத்தைப் பொறுத்தவரை பழனிச்சாமியாக இருந்தாலும் பெரிய திரையில் ரஞ்சித்தாக இருந்து கலக்கிக் கொண்டு வந்தவர் தானே. அதனால் தான் எல்லாரையும் விட டபுள் ஆக வாங்கிக் கொண்டு வருகிறார்.

Also read: இது என்னடா குணசேகரனுக்கு வந்த சோதனை.? துண்டக் காணும் துணிய காணோம்னு ஓடிப்போன ஜான்சி ராணி

- Advertisement -

Trending News