சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இந்த 5 பேரை பார்த்தாலே தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்.. ரஜினி படத்திற்கு பிறகு அட்ரஸ் இல்லாமல் போன தாஸ் இயக்குனர்

Superstar Rajinikanth: பொதுவாக ஒரு இயக்குனர்களின் சினிமா வளர்ச்சி என்பது, அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் கொடுக்கும் வாய்ப்பை பொருத்து தான். எவ்வளவு பெரிய ஹிட் படம் கொடுத்தாலும், அதன் பின்னர் ஒரு தயாரிப்பாளர் அந்த இயக்குனருக்கு பட வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவரால் நிலைத்து நிற்க முடியும். தமிழ் சினிமாவில் இந்த ஐந்து இயக்குனர்களை பார்த்தாலே சமீப காலமாக தயாரிப்பாளர்கள் தலை தெறித்து ஓடுகிறார்கள். யார் அந்த இயக்குனர்கள் என்று பார்க்கலாம்.

பாலா: பொதுவாக தயாரிப்பாளர்கள் குறுகிய கால்ஷீட்டில் படம் எடுத்து அதை உடனே ரிலீஸ் செய்து வெற்றியை பார்த்து விட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இயக்குனர் பாலா விஷயத்தில் அது நடக்காது. அவர் நினைத்த காட்சி வரும் வரைக்கும் நடிகர்களை விடவே மாட்டார். இதனாலேயே அவர் படம் எடுக்க ரொம்ப லேட் ஆகும். மேலும் நல்ல கதை இருந்தும் சில நேரம் பாலா படங்கள் பொருளாதார ரீதியான வெற்றியை பெறாது. இதனால் தயாரிப்பாளர்கள் பாலா படத்தை புரொடியூஸ் பண்ண முன் வருவது கிடையாது.

Also Read:90களில் அதிக செல்வாக்குடன் இருந்த 8 ஹீரோக்கள்.. கமலை தாண்டி சிவாஜிக்கு போட்டி ரஜினி மட்டுமே

மிஸ்கின்: இயக்குனர் மிஸ்கின் ஆரம்ப காலங்களில் நல்ல, நல்ல கதைகளை படமாக எடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். ஆனால் சமீப காலமாகவே இவருடைய நடவடிக்கைகள் ரசிகர்களிடையே நெகட்டிவ் பார்வையை ஏற்படுத்தி வருகிறது. இதனாலேயே மிஸ்கினை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். மிஸ்கினும் இதை புரிந்து கொண்டு நடிப்பு பக்கம் தாவி விட்டார்.

செல்வராகவன்: இயக்குனர் செல்வராகவனின் கதை களங்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். இவருடைய படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவிற்கு வணிக வெற்றியை கொடுப்பது இல்லை. இவருடைய இயக்கத்தில் நடிகராக வளர்ந்தவர் தான் தனுஷ். அவரே சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தும், செல்வராகவனின் படங்களை தயாரிக்க முன்வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Also Read:சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட ஜெயிலர் நரசிம்மா.. ரஜினி செய்யாததை செய்து காட்டிய சிவராஜ்

ஏ ஆர் முருகதாஸ்: தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் இப்போது இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு இருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்பார் படம் பெரிய அடியாக விழுந்தது. இதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த முருகதாஸுக்கு இப்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

லிங்குசாமி: ரன் மற்றும் சண்டக்கோழி திரைப்படங்களின் மூலம் அதிரடி ஆக்சன் இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி கண்டவர் தான் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை. தயாரிப்பாளர்களும் இவருடைய படத்தை தயாரிப்பதற்கு முன் வராததால், தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

Also Read:நேரம் பார்த்து சீண்டிப் பார்க்கும் சன் பிக்சர்ஸ் மாறன்.. ஜெயிலர் வீடியோ வெளியிட்டு பின் டெலிட் செய்த சம்பவம்

- Advertisement -

Trending News