50 கோடியை திருப்பி கொடுத்த பிரபாஸ்.. வேண்டாம் என மறுத்த பிரபலம்

பொதுவாகவே சினிமாத்துறையில் திரைப்படங்களில் வெற்றி தோல்வி எல்லாமே சகஜம் தான். ஆனால் இப்படத்தின் வெற்றி அடைந்தால் மொத்த படக்குழுவினர்களுக்கும் வசூல் ரீதியாக சந்தோஷம்தான். ஆனால் அதே திரைப்படங்கள் தோல்வியடைந்தால் நடிகர்,நடிகைகளை தாண்டி தயாரிப்பாளர்கள் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு தான் வசூல் ரீதியாக அதிக இழப்பு ஏற்படும்.

தெலுங்கில் பிரபலமான நடிகர் பிரபாஸ், பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களின் மூலமாக இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். இயக்குனர் ராஜமவுலியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு திரைப்படங்களும் பிரபாஸின் திரை வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இத்திரைப்படத்தின் மூலமாக பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தையும் 100 கோடியாக உயர்த்தி உள்ளார். தென்னிந்திய நாயகர்களிலேயே பிரபாஸிற்கு மட்டும்தான் இந்த அளவுக்கு சம்பளமாம்

இதனிடையே பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் நடித்த சாஹோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இத்திரைப்படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை வைத்தாலும் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்திய அளவில் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படமாக சாஹோ திரைப்படம் உருவானது. இதனிடையே இத்திரைப்படமும் அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை புரிய வில்லை ஆனால் 433 கோடி ரூபாய் வரை இந்த படம் ஈட்டியது.

இந்நிலையில் தற்போது நடிகர் பிரபாஸ்,நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கடைசியில் ஏமாற்றத்தையே ரசிகர்களுக்கு தந்தது. மிகப் பெரும் பொருட்செலவில் விஷுவல் காட்சிகள், பாடல் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தாலும் இப்படத்தின் கதைக்களம் பெரிதளவு ரசிக்கபடவில்லை என்பதே இப்படத்தின் தோல்விக்கு காரணம்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெறும் 142 கோடி தான் வசூல் செய்ததாம். இதனிடையே 200 கோடியில் பட்ஜெட்டில் உருவான ராதேஷ்யாம் திரைப்படத்தில் பிரபாஸிற்கு மட்டும் 100 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றார். இதனிடையே இப்படத்தின் தோல்வி காரணமாக நடிகர் பிரபாஸ் தான் சம்பளத்திலிருந்து பாதி சம்பளமான 50 கோடி ரூபாயை தயாரிப்பாளரிடம் வழங்கி டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் இப்படத்திற்கான இழப்புகளை ஈடுகட்டுமாறு கேட்டுக்கொண்டாராம்.

இதை தயாரிப்பாளர் வாங்க மறுத்த நிலையில் திரைப்படங்களை என் முகத்திற்கு தான் திரைப்படங்களை டிஸ்ட்ரிபியூட்டர்கள் வாங்குகிறார்கள். அவர்களுக்கு இந்த பணம் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று பெருந்தன்மையாக கொடுத்தாராம். நடிகர் பிரபாஸ் செய்த இச்செயலை பாராட்டி ரசிகர்கள் திரைப்பட கலைஞர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். இதே போல பல நடிகர்கள் இருந்தால் திரைத்துறையில் இழப்பு என்பதை இருக்காது என்றும் பல தயாரிப்பாளர்கள் நடுரோட்டில் வரவேண்டிய சூழல் உருவாகாது என்றும் பல தரப்பினர் கூறுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்