நடிகருக்கு சிபாரிசு செய்யும் பிரபல நடிகை.. பழைய காதலை மறந்து நெருக்கமான ஜோடி

தற்போது பல இயக்குனர்களின் சாய்ஸாக இருப்பவர் அந்த நடிகை. நடிக்க வந்து சில வருடங்கள் தான் கடந்தது என்றாலும் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக்கொண்டு தற்போது அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருந்த அந்த நடிகை தற்போது பெரிய திரையிலும் பயங்கர பாப்புலராக மாறியிருக்கிறார். எந்த அளவுக்கு பிரபலம் இருக்கிறதோ அதே அளவுக்கு அவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சினிமா வாய்ப்புக்காக பல நடிகர்களுடன் நட்பாக பழகி வந்த இவர் தற்போது பிரபல நடிகருக்கு சிபாரிசு செய்து வருகிறாராம்.

நடிகையின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்த அந்த ஹீரோவுக்கு நடிகைதான் சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே நெருக்கமாக இருந்த அவர்கள் தற்போது மேலும் நெருங்கி இருக்கிறார்களாம். இதனால் நடிகை தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் நடிகருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

நடிகை பல வருடமாக ஒருவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் அவரைப் பற்றி தற்போது பல கிசு கிசுக்கள் வெளியாகி வருகிறது. அதைத் தவிர்ப்பதற்காகவே நடிகை சமீபத்தில் காதலருடன் இருக்கும் போட்டோவை சோஷியல் மீடியாவில் பரவவிட்டார்.

ஆனாலும் இதெல்லாம் ஒரு கண்துடைப்பு செயல்தான் என்றும், தன்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடிகை போட்ட திட்டம்தான் என்றும் கூறுகின்றனர். இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையுமா என்று நடிகையை பற்றி தெரிந்த பலரும் சத்தமில்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -