வடிவேலு போல் விவேக்கிற்கு நச்சுன்னு அமைந்த 6 வசனங்கள்.. தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு

Comedy King Vivek: மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறியப்பட்ட விவேக், உண்மையிலேயே கலங்கடிக்கும் சூழலிலும் உறுதியோடு இருந்து இளைஞர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறார். இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிறந்த இந்நாளில் பிறந்து இந்திராகாந்தி இடமே பிறந்தநாள் வாழ்த்து கடிதம் பெற்றவர். இவர் வாங்காத விருதுகளே இல்லை என்பது போல்  பிலிம் பேர் முதல் பத்மஸ்ரீ வரை அனைத்து உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

சின்ன கலைவாணர் விவேக்:  “டோன்ட் ஒரி, பி ஹாப்பி”, “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”,”இன்னைக்கு செத்தா, நாளைக்கு பாலு” என்று காலத்தால் அழியாத வசனங்களுக்கு சொந்தக்காரர். எப்போதும் இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் விருப்பத்தேர்வாக இருந்த விவேக், தான் நடித்த படங்களில் நகைச்சுவையோடு சமூக கருத்துக்களையும் புகுத்தி தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.  முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது கொண்ட ஈர்ப்பால் “கிரீன் கலாம்” என்ற திட்டத்தை துவங்கி அதன் மூலம் 33 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டார்.  நான் தாயார் இறந்த அன்றும்  ஈமக் கடமைகளை  முடித்த கையோடு நேரே தன் ஊரில் உள்ள பள்ளிக்கூடம் சென்று அங்கு ஒரு மரக்கன்றை நட்டார் என்பதின் மூலம் அவரின் சமூக சேவை பற்றி அறியலாம்.

ஆரம்பத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்த விவேக் அவர்கள், இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் உடன் தன் திரை பயணத்தை தொடங்கினார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சாமி, ரன், பார்த்திபன் கனவு, அந்நியன், சிவாஜி, உத்தமபுத்திரன், மீசைய முறுக்கு என பல படங்களிலும் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்து இன்று வரை தமிழ் ரசிகர்களின் மனதை ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Also Read: தன்னைத் தவிர யாரையும் காமெடியனாக நினைக்காத கவுண்டமணி.. விவேக் கூட்டணியில் கலக்கிய 7 படங்கள்

புது புது அர்த்தங்கள்:  கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரகுமான், கீதா நடித்த இப்படத்தில் விவேக், ரகுமானுக்கு உதவியாளராக வந்து காமெடியில் கலக்கி இருந்தார் “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்”  என்ற டயலாக்கை ரஜினி ஸ்டைலில் பேசி போன்லயே பட்டாசு கொளுத்தி போட்டு வில்லியை கலங்கடித்து இருப்பார். இது அந்த காலகட்டத்தில் விவேக்கிற்கு அதிக ரசிகர்களை உருவாக்கியது.

சாமி: ஹரி இயக்கிய சாமி படத்தில் தனக்கான ஒரு காமெடி டிராக்கை  உருவாக்கி சமூக  ஏற்றத்தாழ்வு மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார். பள்ளியில் ஹெட் மாஸ்டர் இடம் இந்த பையனுக்கு ஏன் சீட்டு கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு, இவங்க பேரன்ட்ஸ் படிக்கல அதனால சீட்டு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் ஹெட் மாஸ்டரிடம் முதலில் இவங்க பேரண்ட்ஸ்க்கு சீட்டு கொடுங்க! என்று வாயை அடைத்திருப்பார். தமிழக அரசையே சீண்டும் அளவுக்கு இப்படத்தில் நகைச்சுவையாக சில டயலாக்குகளை அள்ளி தெளித்து இருந்தார்.

சிவாஜி: தலைவருக்கே மாமாவாக நடித்து காமெடியில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் விவேக். தமிழ்நாட்டில் எதை வேண்டுமானாலும் பேசு ஆனால் கலரை மட்டும் பேசாதே. தமிழ்நாடே கொந்தளிக்கும். “அண்ணா கருப்பு. காமராஜர் கருப்பு, தலைமுடி கருப்பு” என அடுக்கிக் கொண்டே போவார் கடைசியில் பேசாமல் தார உத்தி இவ்வளவு கருப்பாக்கிடலாம் என்று பஞ்ச் டயலாக் அடித்து இருப்பார்.

தனுசுடன் விவேக்: “படிக்காதவன், மாப்பிள்ளை, வேலையில்லாத பட்டதாரி, உத்தம புத்திரன்” என பல படங்களில் தனுசுடன் நடித்திருந்தார். தனுஷ் மற்றும் விவேக் காம்போ அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.  தனுசுடன் உத்தமபுத்திரனில் எமோஷனல் ஏகாம்பரமாக நடித்து “முட்டா பீசு முரட்டு பீசு, நான் எங்க செய்றன் என்ன வச்சு நீ நல்ல செய்ற”  என்று கவுண்டர்களை பறக்க விட்டிருந்தார்.

மீசைய முறுக்கு: இப்படத்தில்  தமிழுக்கு எதிராக  பேசுபவரை தூள் தூளாக்கும்  இவரின் தமிழ் பற்று மிக்க  வசனங்கள் பார்க்கும் அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றது. ஒரு சீனில் பள்ளி தலைமையிடம் இங்கிலீஷ் மீடியம் என்பது ஆங்கில கல்வியல்ல ஆங்கில வழி கல்வி. இவங்க ஃப்யூச்சர் ஆங்கிலத்தை நம்பி இல்ல. இவங்க அறிவை நம்பி இருக்கு என்று ரிவிட் கொடுத்து இருப்பார். “தோத்தா ஜெயிக்கணும் மட்டும்தான் தோணும் அவமானப்பட்டா தான் சாதிக்கணும் என்கிற வெறியே வரும், இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா, மீசைய முறுக்கு” போன்ற வசனங்கள் இளைஞர்களின் டேக் லைன் ஆக அமைந்தது.

“ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்” என்பதற்கு இணங்க சின்ன கலைவாணர் விவேக் தன் சொந்த வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்தபோதும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை புரிந்து கொண்டுதான் இருந்திருந்தார். இவர் விட்டுச் சென்ற ஒவ்வொரு மரக்கன்றும் நகைச்சுவையும் மக்களின் நலனுக்காக வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Also Read: ஈகோவில் மண்ணை கவ்விய வடிவேலு.. விவேக் உடன் காம்போவில் கலக்கிய 5 காமெடி படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்