தன்னைத் தவிர யாரையும் காமெடியனாக நினைக்காத கவுண்டமணி.. விவேக் கூட்டணியில் கலக்கிய 7 படங்கள்

Goundamani-Vivek: அக்கால முதல் இக்காலம் வரை நகைச்சுவையில் கொடி கட்டி பறந்து வரும் பிரபலம் தான் கவுண்டமணி. யாரையும் காமெடியனாய், எளிதாய் ஏற்றுக் கொள்ளாத இவர் விவேக்குடன் இணைந்து நடித்த 7 படங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

இவரின் நக்கலான நகைச்சுவைக்கு முன் யாருமே ஈடு கொடுத்து பேச முடியாது என்பது சினிமா வட்டாரங்கள் இடையே பொதுவான கருத்தும் உண்டு. மேலும் யாரையும் எளிதில் பெருமையாக பேச விட மாட்டார். அன்று முதல் இன்று வரை டஃப் ஆக்டராய் பார்க்கப்படுபவர்களில் இவரும் ஒருவர்.

Also Read: நேருக்கு நேராக ரஜினி, கமல் மோதி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. 890 நாட்கள் திரையில் மிரள விட்ட சூப்பர் ஸ்டார்

இவருடன் செந்தில் இணைந்து கலக்கிய காமெடிகள் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் அதன் பின் தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கால் பதித்தவர் தான் விவேக். அவ்வாறு இருக்க, விவேக் உடன் கவுண்டமணி இணைந்து நடித்த காரணம் இது மட்டும் தான்.

ஆம் விவேக் ஆரம்ப காலகட்டத்தில் முழுமையாக எந்த ஒரு நகைச்சுவை கதாபாத்திரமும் ஏற்கவில்லை துணை கதாபாத்திரங்களில் நடிகராக அவ்வப்போது தலைகாட்டி வந்து, பெருதளவு பேசப்படாத காரணத்தால் தான் கவுண்டமணி இவரை ஏற்றுக் கொண்டார் என்ற பேச்சும் அடிபட்டு வருகின்றது.

Also Read: யோகி காலில் விழ இதுதான் காரணம்.. சென்னை திரும்பிய தலைவர் கொடுத்த விளக்கம்

அவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய படம் தான் சிஷ்யா,முத்து குளிக்க வாரியல, இதய வாசல், அவதார புருஷன், உழைப்பாளி போன்றவை. மேலும் 1997ல் குரு தனபால் இயக்கத்தில் வெளிவந்த பெரிய இடத்து மாப்பிள்ளை படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை என்னும் அளவிற்கு கவுண்டமணி, ஜெயராம் இணைந்து அசத்திருப்பார்கள்.

அதில் துணை கதாபாத்திரமான ராமு ரோலில் விவேக் நடித்திருப்பார். அதை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கவுண்டமணிவுடன் விவேக் மேற்கொண்ட நகைச்சுவை படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கும்.

Also Read: உதவி கேட்டதால் நடிகரின் டிரைவருக்கு ஏற்பட்ட அநீதி.. கொந்தளித்த மனைவி செய்த படுபாதக செயல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்