நிர்வாணமாக நடிக்க சொன்ன இயக்குனர்.. பூர்ணாவை பார்த்து மற்ற நடிகைகள் கத்துக்கோங்க

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூர்ணா. ஆரம்பத்தில் இவருக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருவதால் வரவேற்பு கிடைத்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படம் நல்ல வரவேற்பு கிடைத்து நிலையில் பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் பூர்ணாவும் நடித்துள்ளார். இதுதவிர பல படங்களில் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான விசித்திரன் படத்தில் பூர்ணா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் பூர்ணா பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

ஆனால் பூர்ணா அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் படம் ரிலீஸ் ஆகும்போது உங்களுக்கே தெரியும் என கூறிவிட்டார். மேலும் உங்களுக்கு இது போன்று நிர்வாணமாக நடிக்க சொல்லி ஏதேனும் வாய்ப்பு வந்ததா என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த பூர்ணா ஆம் எனக்கும் வாய்ப்பு வந்தது.

ஒரு இயக்குனர் என்னை அணுகி இதில் ஒரு முக்கியமான காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என கூறினார். அது ஒரு மிகப் பெரிய ஒடிடி தளத்திலிருந்து எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. அந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் மிகுந்த மனவருத்தத்தோடு அந்தப் படத்தை மறுத்து விட்டேன் எனக் கூறினார்.

அந்தக் கதைக்கு அந்த நிர்வாண காட்சி மிகவும் முக்கியம். ஆனால் என்னால் அப்படி நடிக்க முடியாது என்பதால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் என பூர்ணா கூறியிருந்தார். பரவாயில்லை பணத்திற்காக எல்லாம் செய்யத் துணிந்த நடிகைகள் மத்தியில் பூர்ணா நிர்வாண காட்சியில் நடிக்க மறுப்பு தெரிவித்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story

- Advertisement -