ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நாக்கு மேல பல்ல போட்டு பேசுன ஊரு.. திருமண நாளில் பதிலடி கொடுத்த ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடியின் புகைப்படம்

Ravinder-Mahalakshmi: கடந்த வருடம் மிகப்பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய ஒரு திருமணம் என்றால் அது ரவீந்தர், மகாலட்சுமி ஜோடியின் கல்யாணம் தான். இது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணத்தையே மறக்கடிக்க செய்யும் அளவுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முக்கிய காரணம் இவர்களுடைய ஜோடி பொருத்தம் தான். அமுல் பேபி மாதிரி இருக்கும் பொண்ணுக்கு இப்படி ஒரு புருஷனா என்று பலரும் வெளிப்படையாகவே தங்களுடைய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் இந்த திருமணம் குறித்து தெரிவித்தனர்.

Also read: இதுவே அந்தரங்க தொழிலாகிவிட்டது.. அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி ஆவேசத்துடன் பேசிய ரோஜா சீரியல் நடிகை

அதிலும் ஒரு சிலர் மகாலட்சுமி பணத்துக்காக தான் இந்த கல்யாணத்தை செய்து கொண்டார் என்றும் இதெல்லாம் எத்தனை நாளைக்கு நீடிக்க போகிறது என்றும் வெளிப்படையாகவே கலாய்த்தனர். சமீபத்தில் கூட இந்த ஜோடி பிரிந்து விட்டதாக ஒரு வதந்தி கூட கிளம்பியது.

இப்படி தங்களைச் சுற்றி எழுந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இந்த ஜோடி முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கின்றனர். அந்த போட்டோ தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஈஸ்வரியின் அப்பா.. செண்டிமெண்டில் உருகி உருகி பாசத்தை கொட்டிய வாரிசு

அதில் ரவீந்தர் தன் மனைவிக்காக போட்டிருந்த நீண்ட பதிவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது ஒரு வருஷம் அப்படியே வேகமா போயிடுச்சு, எங்கள பத்தி நிறைய பேரு பலவிதமா பேசினாங்க. ஆனா என் மனைவியோட அன்பு அதை எல்லாம் தாண்டி வரவச்சிருச்சு. நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

திருமண நாளில் பதிலடி கொடுத்த ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி

raveendar-magalakshmi
raveendar-magalakshmi

இதை பார்த்த பலரும் அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சா என்று ஆச்சரியப்பட்டாலும் இவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல தவறவில்லை. அந்த வகையில் ஊர் உலகம் நாக்கு மேல பல்ல போட்டு பேசினாலும் உண்மையான புரிதல் மற்றும் அன்புடன் அதை கடந்து வந்திருக்கிறார்கள் ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி.

Also read: சாரு பாலாவை ரூட்டு விடும்போது மட்டும் இனிச்சுதோ.. பொண்டாட்டிய பொண்ணு கேட்டதால் கதறிய அழுத குணசேகரன்

- Advertisement -

Trending News