எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஈஸ்வரியின் அப்பா.. செண்டிமெண்டில் உருகி உருகி பாசத்தை கொட்டிய வாரிசு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் 500 எபிசோடுகள் தாண்டியும் இன்னும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்று திக்கு திக்குன்னு திகில் நாடகத்தை பார்ப்பது போல் இருக்கிறது. அதாவது 40% சொத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார் குணசேகரன்.

எப்படியாவது வீட்டில் உள்ள பெண்கள், அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்திடம் பேசி நமக்கு சாதகமான ஒரு முடிவை சொல்வார்கள் என்று முட்டாள் தனமான நம்பிக்கையுடன் இருக்கிறார். அதற்காக வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

அந்த நேரத்தில் நந்தினியின் அப்பா குணசேகரன் வீட்டிற்கு வந்து, என்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சொத்துக்களை விற்று அவளுக்கு மேற்கொண்டு ட்ரீட்மெண்ட் பார்க்கப் போகிறேன் என்ற விஷயத்தை சொல்கிறார். இதற்கிடையில் நந்தினி, கதிர் மற்றும் குணசேகரனை அசிங்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு விஷயத்தை வைத்து அவர்கள் செய்த அட்டூழியத்தை அம்பலப்படுத்தி வருகிறார்.

அப்பொழுது எதிர்பாராத நேரத்தில் ஈஸ்வரியின் அப்பாவும் வீட்டிற்கு வந்து விடுகிறார். வந்ததும் நந்தினியின் அப்பாவிடம் பொறுமையாக இருங்கள் நான் வந்ததுக்கு அப்புறம் எல்லாம் பேசிக்கலாம் என்று சொன்னேன் ஏன் அவசரப்பட்டீர்கள் என கேட்கிறார். அத்துடன் குணசேகரனிடம் உங்களுக்கு தேவையான சொத்துக்கள் அனைத்தும் வந்துவிடும். அந்த ஜீவானந்தன் ஏற்கனவே என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தபோதே அவனை சும்மா விட்டு இருக்க கூடாது என்று உளறுகிறார்.

Also read: குணசேகரன் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரியின் அப்பா.. மனுஷன் சொத்து போனதுக்கு கூட இந்த அளவுக்கு கலங்கலையே

உடனே குணசேகரன், ஜீவானந்தம் உங்கள் வீட்டுக்கு வந்தாரா என்று கேட்கிறார். ஆமாம் வந்தார், ஈஸ்வரியிடம் தனியாக பேச வேண்டும் என்று கூட்டிட்டு போய் பேசினார். அதன்பின் விசாரித்ததில் தான் தெரிகிறது அவர் ஏற்கனவே ஈஸ்வரி கல்லூரியில் படிக்கும் போது வீட்டிற்கு வந்து பொண்ணு கேட்டார். அவருக்கு இதே தான் வேலை யாராவது நல்லா இருந்தா அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்கிறது, சொத்து யார்கிட்டயாவது இருந்தா அவங்க சொத்தை புடுங்குறது என்று முட்டாள்தனமான பேச்சுக்களை குணசேகரன் முன் வைக்கிறார்.

ஏற்கனவே குணசேகரன், ஜீவானந்தத்தின் மீது கொலை வெறியுடன் இருக்கிறார். அது தெரிந்தும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பைத்தியக்காரர் மாதிரி அனைத்தையும் சொல்லி விடுகிறார். இதைக் கேட்டதும் குணசேகரன் ராட்சசன் போல் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரிக்காக. இனி இவருடைய ஆட்டம் என்னவாக இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: உளறித் தள்ளிய முரட்டு வில்லன் வசமாக சிக்கும் வேட்டை நாய்.. குணசேகரன் கூண்டோட கைலாசம் செல்லும் நேரம் வந்துடுச்சு

- Advertisement -