ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இதுவே அந்தரங்க தொழிலாகிவிட்டது.. அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி ஆவேசத்துடன் பேசிய ரோஜா சீரியல் நடிகை

Serial Actress: திரை உலகில் இருக்கும் மூத்த நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜஸ்ட்மெண்ட் தான். ஒரு படத்தின் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சொல்லும்படி நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் அந்த படத்தில் இருக்க முடிகிறது.

இந்த சூழ்நிலை வெள்ளி திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் நிலவுகிறது. இதைப்பற்றி சன் டிவி சீரியலில் டிஆர்பி-யில் பட்டையை கிளப்பிய ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்கா வெளிப்படையாக பேசியிருக்கிறார். ரோஜா சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகை பிரியங்கா.

Also read: டிஆர்பி இல்லாததால் சீரியலில் இருந்து விலகும் விஜய் டிவி கதாநாயகன்.. இவருக்கு பதில் இவரா!

இவர் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை குறித்து சமீபத்திய பேட்டியில் கோபத்துடன் பேசி உள்ளார். சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு அந்தரங்க டார்ச்சர் நடக்கிறது. இப்போது எல்லாம் அது சர்வசாதாரணமாக விசயமாகிவிட்டது.

அதுவும் ஒளிவும் மறைவு இல்லாமல் ஸ்ட்ரைட் ஆகவே அட்ஜஸ்ட்மென்ட் செய்யும்படி கேட்கிறார்கள். சினிமா இப்போது அந்தரங்க தொழிலாகிவிட்டது. இது சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் இப்படித்தான் அநீதி பெண்களுக்கு நடக்கிறது. இதையெல்லாம் கேட்கும் போது கோபம் வருகிறது.

Also read: என்னது அதுக்குள்ள சன் டிவியின் இந்த சீரியல் 500 எபிசோடுகளை தாண்டிட்டா.! கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம்

இந்த பிரச்சனையால் தான் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை சினிமாவிற்கு அனுப்ப தயங்குகின்றனர். ஆனால் இது போன்ற பிரச்சினைகளை பெண்கள் வீட்டில் இருப்பவர்களிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும். முதலில் அவரவர் வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளை மதிக்க சொல்லி வளர்க்க வேண்டும்.

எப்போதுமே பிறரை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என சொல்லித் தர வேண்டும். குடும்பத்தில் இப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயம் சமுதாயத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும். இருப்பினும் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து நடிகைகள் தற்சமயம் தைரியத்துடன் எதிர் கொண்டு வருகின்றனர் என்று சீரியல் நடிகை பிரியங்கா பேசி உள்ளார்.

Also read: நடிகை இல்லேன்னா பரவால்ல அவங்க அம்மாவ அட்ஜஸ்ட்மெண்டுக்கு வர சொல்லுங்க.. பதறிப்போன விஜய் டிவி ஹீரோயின்

- Advertisement -

Trending News