விஜயாவை ஆட்டிப்படைக்கும் பாட்டி.. கழுவுற தண்ணில நழுவுற மீனாக எஸ்கேப்பாகும் ரோகினி

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி பணக்கார வீட்டு பெண்ணாக பொய் சொல்லி விஜயாவின் மருமகளாக போய்விட்டார். அத்துடன் ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதை மறைத்து பொய் பித்தலாட்டம் செய்து வருகிறார். என்ன இருந்தாலும் இவருடைய வாழ்க்கைக்காக தான் இப்படி பண்ணுகிறார் என்று நினைத்தாலும், மீனா மற்றும் முத்துவை மட்டம் தட்டி பேசுவது இவருடைய கேரக்டரை சொதப்பிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் பணக்கார பெண்ணாகவே ஓவராக அந்த வீட்டில் சீன் போட்டு மாமியாரிடம் தாஜா பண்ணுகிறார். இது தெரியாமல் விஜயா, ரோகினியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி ஓவராக பாசத்தை பொழிகிறார். விஜயாவை பொறுத்தவரை பணம் வசதி இருந்தால் போதும் அவருக்கு ஜால்ரா அடிக்க போய்விடுவார். அப்படித்தான் ஸ்ருதி மற்றும் ரோகிணிக்கு அடிமையான மாமியாராக மாறிவிட்டார்.

இதனை தொடர்ந்து கிராமத்தில் இருக்கும் விஜயாவின் மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் அனைவரும் போகிறார்கள். அங்கே போன இடத்திலும் மீனாவை தான் வேலைக்காரியாக அனைத்து வேலைகளையும் செய்ய சொல்கிறார் விஜயா. இதை பார்த்த பாட்டி விஜயாவிற்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார்.

Also read: தர்ஷினியை கடத்திய குணசேகரனின் தங்கச்சி.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஈஸ்வரி

அதன் வாயிலாக என் வீட்டுக்கு வந்தனா என்னுடைய மருமகளாக நீ தான் எல்லா வேலையும் பார்த்து சமைக்க வேண்டும் என்று விஜயாவிடம் கூறியிருக்கிறார். அதன்படி விஜயாவுக்கு உதவியாக ரோகிணி மற்றும் ஸ்ருதியும் சமையலுக்கு உதவிக்கு அனுப்புகிறார். இதையெல்லாம் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த ரோகிணி என்னமோ உண்மையிலே பணக்காரப் பெண்ணாக ஓவராக ஆட்டம் போடுகிறது.

பிறந்த வீடும் அதே கிராமம் தான், ஏழை வீட்டு பெண்ணாக தான் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து வந்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் கழுவுற தண்ணில நழுவுற மீனாக ஒவ்வொரு விஷயத்திலும் எஸ்கேப் ஆகி வருகிறார். அதன் படி மாமியாரையும் அந்த வீட்டில் மற்றவர்கள் வாயும் அடைப்பதற்காக பணக்கார மாமா ஊரில் இருந்து வருகிறார் என்று ஒரு தில்லாலங்கடி வேலையை செய்கிறார்.

அதாவது பணத்தை கொடுத்து ரோகிணியின் மாமாவாக ஒருவர் வரப்போகிறார். அதற்கு ஏற்ற மாதிரி கவரிங் நகைகளையும் கொண்டு வந்து விஜயாவை நம்ப வைக்கப் போகிறார். ஆனால் இவர் இந்த மாதிரி திருட்டு வேலைகள் எல்லாம் பண்ணுகிறார் என்ற ஒரு விஷயம் கூடிய விரைவில் முத்து மூலமாக அந்த குடும்பத்திற்கு தெரிய போகிறது. அப்பொழுதுதான் உண்மையான ரோகிணியின் முகம் என்னவென்று விஜயாவுக்கு தெரியப்போகிறது.

Also read: மகேஷ் பாசத்துக்கு அடிமையாகி காதலில் விழுந்த ஆனந்தி.. கேள்விக்குறியாக நிற்கப் போகும் அன்பு

- Advertisement -spot_img

Trending News