இந்த வார டிஆர்பி ரேட்டிங்கை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்.. மொத்தத்தையும் வாரி சுருட்டிய ஒரே சேனல்

TRP Ratings top 10 serials List: சின்னத்திரையில் அனுதினமும் ஒளிபரப்பாகும் சீரியல்களால் தான் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றனர். அதிலும் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களை பற்றி பார்ப்போம்.

இதில் கடந்த சில வாரங்களாக ரேஸில் இருந்து விலகிய ஜீ தமிழ் சீரியல்கள் மறுபடியும் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களுடன் போட்டி போட்டு டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளது. டாப் 10 லிஸ்டில் 10-வது இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

Also Read: இனியா விஷயத்திலும் தோற்றுப்போன கோபி அங்கிள்.. யாருமே மனுஷனா கூட மதிக்கிறது இல்ல, என்ன கொடுமை சார் இது

அதன் தொடர்ச்சியாக 9-வது இடம் நான்கு அண்ணன் தம்பிகள் தங்களது மனைவியுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருந்து கூட்டுக்குடும்ப மகத்துவத்தை காட்டிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 8-வது இடம் புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை என்ற சீரியலுக்கு கிடைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக 7-வது இடத்தை குடும்பத்தையும் கேட்டரிங் தொழிலையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கப்பெண் பாக்யாவின் கதையை சொல்லும் பாக்கியலட்சுமி சீரியல் பெற்றுள்ளது. 6-வது இடத்தை சன் டிவியின் சுந்தரி சீரியல் பெற்றுள்ளது.

Also Read: வில்லத்தனத்தையும் தாண்டி அழுது சிரிக்க வைத்த குணசேகரன்.. கொஞ்சம் கூட அசராமல் அடிக்கும் ஜீவானந்தம்

5-வது இடத்தை சில மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட Mr. மனைவி என்ற சீரியலும், 4-வது இடத்தை செம போல்டான இனியா கேரக்டரில் பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கும் ஆலியா மானசாவின் இனியா சீரியலுக்கு கிடைத்துள்ளது. 3-வது இடம் அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப் போல சீரியல் பெற்றுள்ளது.

2-வது இடம் குணசேகரனின் நக்கல் நையாண்டிக்கு குறைச்சல் இல்லாத எதிர்நீச்சல் பெற்றுள்ளது. இதில் நான்கு மருமகள்கள் தங்களது சுய மரியாதையை நிலை நிறுத்திக் கொள்வதற்கும், ஆணாதிக்க பிடியிலிருந்து விடுபடவும் துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். முதலிடம் அதிரடி காதல் கதைகளத்தை கொண்ட கயல் சீரியல் பெற்றுள்ளது.

Also Read: குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

அதிலும் முதல் டாப் 6 இடத்தை சன் டிவியின் சீரியல்கள் தான் ஆக்கிரமித்து, மற்ற எந்த சேனல் சீரியல்களையும் உள்ளே விடாமல் சின்னத்திரை ரசிகர்களை வசியம் செய்துள்ளனர். அதே சமயம் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழும் சன் டிவியுடன் சரிக்கு சரி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News