சினிமாவை விட சீரியலில் கொள்ள லாபம் பார்க்கும் 5 நட்சத்திரங்கள்.. 100 கார்களை மாற்றி கொடிகட்டி பறக்கும் பப்லு

Highly Paid Serial Actors: முன்பெல்லாம் டிவி சீரியல்கள் என்றால் அது வீட்டில் இருக்கும் பெண்கள் பார்ப்பது என்று பொதுவான கருத்து இருந்தது. இப்போது எல்லோருமே சீரியல்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனாலேயே ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. மேலும் அந்த சீரியல்களில் நடிக்கும் முக்கியமான கதாபாத்திரங்களும் சம்பளத்தில் கொள்ள லாபம் பார்த்து வருகிறார்கள்.

மாரிமுத்து – எதிர்நீச்சல்: பல வருடங்களுக்குப் பிறகு சன் டிவி மீண்டும் விட்ட இடத்தை பிடித்ததற்கு காரணம் எதிர்நீச்சல் தான். சினிமாவில் உதவிய இயக்குனராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது இந்த சீரியல் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறார். ஆணாதிக்கம் நிறைந்த இவர் தன் மனைவி மற்றும் தம்பி மனைவிகளுடன் மல்லுக்கட்டும் காட்சிகளை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். மாரிமுத்து ஒரு எபிசோடிற்கு 30,000 சம்பளம் வாங்குகிறார்.

Also Read:சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பாக்யா.. சரியான நேரத்தில் என்ட்ரி கொடுக்கும் பழனிச்சாமி

பப்லு – கண்ணான கண்ணே: பப்லு என்னும் பிரித்விராஜ் வெள்ளித் திரையில் ஹீரோவாகவும், வில்லனாகவும், ஹீரோவின் நண்பனாகவும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் வாணி ராணி சீரியல் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பின்னர் கண்ணான கண்ணே சீரியலிலும் பயங்கர வரவேற்பை பெற்றார். ஒரு எபிசோடு இருக்கு 20 ஆயிரம் சம்பளமாக வாங்கும் இவர் இதுவரை 100 கார்களை மாற்றி இருக்கிறாராம்.

அம்பிகா- அருவி : 90 களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்து தென்னிந்திய சினிமாவை கலக்கிய அம்பிகா, அருவி என்னும் சீரியலில் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் படங்களில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இவருக்கு சீரியல் கை கொடுத்து இருக்கிறது. அம்பிகா ஒரு எபிசோடிற்கு 35,000 வரை சம்பளமாக வாங்குகிறார்.

Also Read:கமலால் தாமதமாகும் பிக் பாஸ்.. கேஎஸ் ரவிக்குமாரை லாக் செய்த விஜய் டிவி

ரஞ்சித் – பாக்யலட்சுமி : தமிழில் நட்புக்காக போன்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ரஞ்சித்துக்கு வெள்ளித்திரையில் அந்த அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. செந்தூரப்பூவே என்னும் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வந்த இவருக்கு அந்த நாடகத்திலேயே பயங்கர வரவேற்பு கிடைத்தது. தற்போது பாக்யலட்சுமி தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு எபிசோடிற்கு 30,000 வரை சம்பளம் வாங்குகிறார்.

ஸ்டாலின் – பாண்டியன் ஸ்டோர்: தெக்கத்தி பொண்ணு என்னும் சீரியலின் மூலம் தன்னுடைய நடிப்பை தொடங்கிய ஸ்டாலின் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மூர்த்தி என்னும் கேரக்டரில் இவர் நடித்த பிறகு ரசிகர்களிடையே அதிகம் பரீட்சையமானார். இந்த நாடகம் இப்போது இவருக்கு அடையாளமாக மாறிவிட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒரு எபிசோடிற்கு நடிக்க ஸ்டாலின் 15000 சம்பளம் வாங்குகிறார்.

Also Read:வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்