ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட மாஸ்டர் மாளவிகா.. தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் பா ரஞ்சித்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகன். இவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கு காரணம் அவருடைய நடிப்பு திறன் இல்லை. இவர் போடும் கவர்ச்சி வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பார்த்து தான் ரசிகர்களுக்கு இவர் மீது ஈர்ப்பு வந்துள்ளது. ஆனால் இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை.

Also Read : மாளவிகாவை ஓரம்கட்டி பூ நடிகைக்கு கிரீன் சிக்னல்.. பா ரஞ்சித், விக்ரம் கொடுத்த ட்விஸ்ட்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் மாளவிகா மோகன் ஒப்பந்தமாகி உள்ளாராம். ஒரு பெரிய ஹீரோவின் பட வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக மாளவிகாவுக்கு பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லையாம்.

அதாவது மாளவிகாவுக்கு நடிப்பு வராமல் ஒரு நாள் முழுவதும் வீணடித்து விடுகிறாராம். இவரால் பணம் தான் விரயம் ஆகிறதாம். தயாரிப்பாளருக்கு தினமும் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படுகிறதாம். இவரிடம் எப்படி நடிப்பை வாங்குவது என்று தெரியாமல் முழித்து வருகிறாராம் பா ரஞ்சித்.

Also Read : காட்டுமிராண்டியாக ஆக்ரோஷம் காட்டும் விக்ரம்.. பா ரஞ்சித் கூட்டணியில் வித்தியாசமான டைட்டில் வெளியீடு

இதனால் தினமும் ரஞ்சித்துக்கு தங்கலான் படப்பிடிப்பு போர்க்களமாக அமைந்துள்ளதாம். தேவை இல்லாமல் மாளவிகாவை புக் செய்து விட்டோமே, இவருக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை போடலாமா என படக்குழுவிடம் பா ரஞ்சித் பேசி வருகிறாராம்.

கவர்ச்சியை மட்டுமே நம்பி உள்ள மாளவிகாவை மகா நடிகை என்று அழைத்தது தவறுதான் என இப்போது தங்கலான் படக்குழு வருத்தம் அடைந்துள்ளார்களாம். ஆகையால் மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவது கஷ்டம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Also Read : காந்தாராவை தூக்கி சாப்பிட வரும் மறைக்கப்பட்ட வரலாறு.. விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கும் பா ரஞ்சித்