புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் அந்த வாழ்க்கைக்கு ஆசைப்படும் கடைக்குட்டி.. கொஞ்சம் ஓவராக போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores Serial: ஆரம்பத்தில் மக்கள் தூக்கி கொண்டாடி வந்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தை தற்போது சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று கெஞ்சும் படி மிகக் கேவலமாக கதையை உருட்டி வருகிறார்கள். வசதி இல்லாமல் ஒற்றுமையுடன் வாழும் போதே பாத்ரூம் பிரச்சினை, வீடு பிரச்சனை, அண்ணன் தம்பிகளின் பிரச்சனை என்று தொடர்ந்து கொண்டே வந்தது.

தற்போது பெரிய வீடு கட்டி பணம் வசதியுடன் இருக்கும் பொழுது ஏசி பிரச்சனையை கொண்டு வருகிறார்கள். இதுல இந்த கண்ணன் வேற சொகுசுக்கு ஆசைப்பட்டு குழந்தைகளுடன் தனத்தின் ரூமில் தூங்கி அட்டூழியம் செய்கிறார். எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் செஞ்ச தவறின் குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் மானங்கெட்ட ஜென்மமாய் கண்ணன் உலாவி வருகிறார்.

Also read: கதாநாயகியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டஃப் கொடுக்க வரும் புத்தம் புது சீரியல்

அடுத்ததாக நாங்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று ஒரேடியாக அனைத்து மருமகளும் மாறிவிட்டார்கள். தனத்தை தங்க தட்டில் வைத்து தாங்குவது மட்டுமில்லாமல் கூடவே இவர்களும் சேர்ந்து எல்லா கஷ்டத்தையும் அனுபவிப்பார்களாம். இதுல தியாகி செம்மல் என்ற பட்டத்தை தலையில் சுமந்து கொண்டு வரும் தனம் ஓவராக பாசத்தில் மிதக்கிறார்.

இதனை அடுத்து தனம் ரூமுக்கு மட்டும் ஏசி வைக்கப்பட்டதால் மிகவும் வேதனையாகி மூர்த்தியிடம் புலம்புகிறார். உடனே அவரும் தானத்திற்கு ஆறுதல் சொல்லி நாளைக்கே இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று கூறுகிறார். அந்த வகையில் அனைவரும் ஒரே வீட்டில் மாநாடு போடுவதற்கு தயாராகி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: டிஆர்பியில் மங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. ஒரே கதையே வச்சு உருட்டினா இப்படிதான்

அதில் தலைவராக மூர்த்தி நுழைந்ததும் அனைவரிடமும் ஒரு விஷயத்தை சொல்ல போகிறேன் அதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று பில்டப் கொடுக்கிறார். அதாவது தனத்திற்கு அவளுடைய ரூமில் மட்டும் ஏசி இருப்பது பிடிக்கவில்லை. அதனால் உங்கள் அனைவருக்கும் உடனே ஏசி மாட்ட சொல்லி இருக்கிறேன் என்று ஓவராக பாசமலையை கொட்டுகிறார்.

இதைக் கேட்ட மற்ற மருமகள்கள் அதெல்லாம் வேண்டாம் என்று கொஞ்சம் ஓவர் சீன் காட்டப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கியமான கதை திங்குறது தூங்குகிறது சொகுசாக மாநாடு நடத்துவது தான். இந்த பொழப்புக்கு இவங்க நாடகத்தை கூடிய விரைவில் முடித்தால் ஓரளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்த முடியும்.

Also read: சல்லி சல்லியாக உடைய போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி.. வெளியேறும் மூர்த்தியின் தம்பி

- Advertisement -spot_img

Trending News