ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சல்லி சல்லியாக உடைய போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி.. வெளியேறும் மூர்த்தியின் தம்பி

Pandian Stores Serial: டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், துவங்கப்பட்டதிலிருந்து கடந்த ஐந்து வருடங்களாக ரசிகர்களின் மத்தியில் கூட்டு குடும்ப மகத்துவத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் நான்கு அண்ணன் தம்பிகள் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இதுதான் இந்த சீரியலின் ஹைலைட். அப்படி இருக்கும்போது மூர்த்தியின் மூன்று தம்பிகளில் ஒருவர் தற்போது அதிரடியாக சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டிஆர்பி சல்லி சல்லியாக உடைய போகிறது.

Also Read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் ரணகளம் செய்த ஒரே சேனல்.. அதிரடியாக போட்டி போடும் சன், விஜய், ஜீ தமிழ்

இந்த சீரியலில் மூத்த அண்ணனான மூர்த்திக்கு ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய மூன்று தம்பிகள் இருக்கின்றனர். இதில் ஜீவா கேரக்டரில் நடிக்கும் வெங்கட் உடைய நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். அதிலும் அவ்வப்போது குடிகாரர் போல் நடிக்கும் இவருடைய ஆக்டிங்கை பார்க்கும்போது அப்படியே நிஜக் குடிகாரரை கண்முன் காட்டுவார்.

தற்போது வெங்கட், தளபதி விஜய்யின் அப்பாவான பிரபல இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கும் கிழக்கு வாசல் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் கிழக்கு வாசல் போன்ற இரண்டு சீரியல்களிலும் அவரால் நடிக்க முடியாததால், கால்சீட் பிரச்சினை காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தற்போது விலகி விட்டார்.

Also Read: தம்பிக்காக கொலைவெறியில் பாய்ந்த மூர்த்தி.. எதிர்பாராத திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடந்த ஐந்து வருடங்களாக ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட்டை பார்த்த ரசிகர்களுக்கு திடீரென்று புதிதாக ஒரு நடிகரை மாற்றுவது ரசிகர்களுக்கு பிடிக்காது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி இனிவரும் நாட்களில் பயங்கர அடி வாங்க போகிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவின் மனைவியாக மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் புதிய நபருடன் புகைப்படம் எடுத்து ‘புதிய ஜீவா’ என பதிவு செய்து இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆகையால் இனி வரும் எபிசோட்டில் வெங்கட்டுக்கு பதில் ஜீவாவாக புதிய நடிகரை பார்க்கப் போகிறோம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா போட்ட பதிவு

pandian-stores-meena-cinemapettai
pandian-stores-meena-cinemapettai

Also Read: அறக்கப்பறக்க பாண்டியன் ஸ்டோர்ஸை உருட்டும் இயக்குனர்.. கிரகப்பிரவேத்தில் ஒன்று சேரும் குடும்பம்

- Advertisement -

Trending News